உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

88 பல்கீஸ் நாச்சியார் காவியம் யூசருகு இலையுதிரிந்த நெடுமரமாய் ஆனான் இருவிழியும் குற்றால அருவியெனக் கொண்டான் பாசமிகு மகவுதனை நோக்கிடுவான் தன்னைப் பாராமல் கிடக்கின்ற உமையிரத்தைப் பார்ப்பான் வீசுதென்றல் புயலாக மாறிடுமோ கணத்தில்? விழுங்கையிலே கற்கண்டு வேம்பாகிப் போமோ? நாசமிது போலுண்டோ, என்மகளே உன்னை நானெவ்வி தம்வளர்ப்பேன்? எனவெடுத்த ணைப்பான் இறந்துபட்ட உமையிரத்தை அடக்குவதற் காக எடுத்தேகும் கடல்போன்ற மக்களிடை மேவி மறந்தென்னை விட்டேநீ செல்லுவதோ உன்னை மறந்துநான் இவ்வுலகில் எவ்வாறு வாழ்வேன்? சிறந்தயிந்த மகவுதனை எவ்விதம்வ ளர்ப்பேன்? சீர்த்திமிகும் பெண்கொடியே ஈதறமோ என்றே அறிவார்ந்த யூசருகான் அழுதரற்றி நொந்தான் (263) அறவாளர் அவன் நிலையை மாற்றமுயன் றிட்டார்(263) மண்ணிலிட்ட போதந்த மண்ணினோடு மண்ணாய் மடிந்திடவே யூசருகு மனத்துணிவு கொண்டான் எண்ணரிய நீதிகளைக் கற்றறிந்த அவன்தன் இடர்ப்பாட்டைக் கண்டவர்கள் "கற்றறிந்த ஞானம் திண்ணியனாய் மானுடனை ஆக்கல்அரி கென்னும் சிந்திப்பை இவன் நிலைமை காட்டிடுதே" என்பார் பெண்மைநலம் மானிடனைப் பேதலிக்கச் செய்யு . பெற்றியதாம் என்பதையும் கண்டோம்இன் றென்பார் (264) மகளுக்காய் இறந்திட்டாள் அரசியந்தப் போதே மன்னவனும் படுக்கையிலே வீழ்ந்திட்டான் அன்றே அகம்நொந்து உடல்தேய்ந்த யூசருகு பெற்ற அருமகவை வளர்ப்பதற்காய் வாழ்ந்திட்டான் உலகில் சிகையழகும் முகஅழகும் தேகத்தின் அழகும் தினம் வளர வளர்ந்திட்டாள் பல்கீசுக் கன்னி தகவுடைய தாய் அழகும் தந்தையின் நல் லழகும் தனியவன்தான் தனியாகத் தந்தஉயர் அழகும் (265)