{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் தாதியர் பிள்ளையைத் தாங்கி யெடுத்துமே தரள மணியுள ஊஞ்சலி லிட்டனர் "வேதம் உரைத்திடும் மேன்மைகள் யாவுமே மேவுக என்றிசைப் பாட்டிசைத் தாட்டினர் போதம் மிகுந்த பிள்ளையின் ஊஞ்சலை போந்துதம் கையினால் ஆட்டிட எண்ணியே பாதம் தரையிடைப் பட்டிடா உமையிரத்து பாசம் மேலிட எழுந்து நடந்தனள் ஆசைக் கால்களை விரைந்து நடத்திட ஆண்டவன் ஏவல் அதனினும் முந்திட வீசு தென்றல் வேகமே கூட்டிட மெலிந்த உடல்மிகத் தளர்வினைத் தந்திட மாசு மறுவிலா உமையிரத் தானவள் மயங்கி விழுந்திட மார்படி பட்டிட 50 (258) ஓசைப் படாமலே மறலி வந்திட உயிரும் பிரிந்திட உடல்தரை யுற்றதே (259) வேறுநடை உமையிரத்தாள் இறந்தாளெனும் ஓலம்ஜின் நாட்டின் ஒவ்வொருவர் காதினிலும் பட்டுருவி நெஞ்சைக் குமைத்தெடுக்க வாய்விட்ட முதரற்றி நொந்து கூடினரே அரண்மனையின் முன்புகடல் போன்றே சமைந்தபெருங் கல்லெனவே வேந்தன்வீற் றிருக்க தனைமறந்த நிலையினிலே அரசிதரை கிடக்க மைதிறந்து விழிதிறந்து இதழ்திறந்து குழந்தை எதைக்கண்டோ சிரித்தபடி தொட்டிலிலே கிடக்க (260) விழாக்கோலம் பூண்டிருந்த ஜின்னரசன் நாட்டில் வீதிதொறும் வீடுதொறும் துக்கநிழல் படிய அழகிழந்து பொலிவிழந்து துயரம் அர சோச்ச ஆருயிரை யாவருமே இழந்தநிலைக் கானார் எழிலிசைமு ழக்கெல்லாம் இற்றொழிந்து போக எங்ஙணுமே சோகஇசை வீறுகொண்டு நிற்க அழல்பற்றி எரியும்ஒரு வீடாக நாடே ஆனதுவே உமையிரத்தாள் இறந்துபட்ட தாலே (261)