{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
84 வங்கீஸ் நாச்சியார் காவியம் அழகு பொறுமை அமைதி பிறவுமாய் அமைந்த சிறப்பெலாம் பிறங்கிடும் தன்மையில் எழிலுறும் பெயரொன் றியம்பிட உம்மிடம் இறைஞ்சி னேன்விரைந் துரையுமென் றியம்பினான் அழியாக் கல்வியில் தோய்ந்த மனத்தவர் அரிய சரித்திரப் பெயரெலாம் கூறினர் செழிய மன்னவன் செவிக்கது இன்பமாய்த் தெரிந்தில ஆதலால் ஏற்றிலன்; நூலவர் சரித்திரம் தன்னை விலக்கி இலக்கியம் சாற்றும் பெயர்களை விண்டனர் அன்னவர் உரைத்தஅப் பெயரெலாம் எளிமையாய் இலையென ஒதுக்கியே ஜின்னர சானவன் கூறினான் "பொருத்த மாகிய பெயரொன் றுரைத்திடில் பொற்குவை யீகுவேன் போதத் துறையினீர் கருத்துடன் சிந்தியும்" என்றதும் கற்றவர் கருத்தும் சுண்ணும் திறந்தன செவ்வையாய்
- பிள்ளையின் தந்தையூர் 'சபா' அந் நாட்டுறும்
பீடுறும் மலர்ப்பெயர் பல்கீஸ் ஆனதால் கொள்ளை வனப்புள பிள்ளைக்(கு) அப்பெயர் சூட்டுதல் பொருத்தமே கொள்ளும்" என்றனர் விள்ளரும் மேலவர் விளம்பிய பெயர்ஜின் வேந்தனின் மனத்தினை மிகவும் கவர்ந்ததால் (254) (255) அள்ளியே நன்நிதி அளித்தம் மகவிற்[கு] அப்பெயர் இட்டிட அரசன் வேண்டினான் ஆயிரம் மேலவர் நாவுகள் ஆர்த்தன ஆயிரம் கல்விமான் செந்நா ஆர்த்தன (256) ஆயிரம் ஆயிரம் மக்களின் நாவுகள் ஆர்த்தன பல்கீஸ் என்னுமந் நாமத்தை தோயும் மலருடன் பொன்னையும் தூவியே சொன்னாள் அரசியப் பெயரினைத் துலக்கமாய் தாயும் தந்தையும் தம்மகள் நற்பெயர் சாற்றி மகிழ்ந்தனர் தரையெலாம் போற்றவே (257)