{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
60 பல்கீஸ் நாச்சியார் காவியம் தக்க முறையிலே செய்யவி யலாவிடிதல் தாங்கும் பதவித னை இதோ இக்கண மேபிடி" என்றம் மன்னன் இடத்தி லெறிந்து விட்டே, ஒரு துக்கமு மின்றியச் சூழலை விட்டுத் தூர விலகலொன் றா, மிதை எக்கண முஞ்செய எண்ணார் பதவி வகித்தல் பிழையா கும்-தன் தாரம தல்லா மாதரைத் தன்னருந் தாயாய் நினையா த,பழி காரனை மேலவன் என்று மதிப்பது கற்றோர் செயலா மோபடு சூரனே யாயினுந் தாரங் கடப்பவன் துட்ட விலங்கா வான், அவன் வேரோ டழிந்திட வேண்டுவ செய்தலே வீர மறச்செய லாம்மனம் ஒவ்வா நிலையிலே அஞ்சியோ ஆசைக்கோ உட்படும் பெண்களு மே, உயர் செவ்வியும் மானமும் வெட்கமு மேயிலா மிருக இனத்தவராம் இதைப் பவ்விய மாகப் பகர்ந்தே மக்களை பாங்குற வாழச் செய்வோர்செயல் நவ்விய தாகும் நாயகன் நல்லருள் நாளும் அவருக்குண்டாம் எனச் செப்பினள் தீயவை செய்பவன் தன்னிலும் தீயதைப் பார்த்திருத் தல்மிகத் தப்பித மாகுமத் தப்பிதம் தன்னையென் தந்தையே செய்குவ தோஇதை ஒப்பில தென்மனம் ஒப்பிலேன் இங்கினி ஓர்கணம் நானிருக் கஇதோ இப்பொழு தேசபா நாட்டிற் கேகநான் எழுந்தனன் என்றா ளவள். திருமணப் பிணைப்பு. (885) (286) (287) (288)