{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் அறுசீர்ச்சந்தவிருத்தம் "மாவழ குடைய பல்கீ சென்னும் மகளுரை தனைக்கேட்ட ஓவிய மொத்த யூசரு கென்னும் உத்தமன் மனத்தினிலே ஆவிநி கர்த்த தன்மகள் கூற்றுநல் அமைச்சனின் கடமையதே மேவியக் கடமையைச் செய்யா திருந்தது மிகப் பெரும் தவறன்றோ' என்ற சீரெண்ணம் எழுந்த தடங்குமுன் எழிலார் பல்கீசு நன்றே இருகர மிணைத்து வொலியெழ நயப்புறத் தட்டினளே ஒன்றி எழுந்த வொலிகேட் டொரு பணிப் பெண்ணோ டோடிவந்தாள் இன்றே நான்சபா நாட்டிற் கேகிட ஏற்றதைச் செய்யும்படி சென்றென் பாட்ட னிடம்நீ செப்பெனச் செப்பினள் பல்கீசு நன்றெனப் பணிந்து நடந்தாள் பணிப்பெண் நல்லனாம் யூசருகான் ஒன்றுகேள் மகளே நானங் குறைவதோர் ஓலைவேய் சிறுகுடிசை நன்குற அரண்மனை தன்னிற் பிறந்த நாள்முதல் வாழ்ந்துவரும் நீவந் தங்கே தங்குவ தியலா நிலையா மெனவுரைத்தான் "சாவ தாயினும் சரிநான் வருவேன் தடுக்கா தீரென்றே மேவு மெழிலார் பல்கீ சுரைக்க விதிர்விதிர்ப் புற்றனனே யாவரும் போற்று மறிவார் சுறாயிக் கெனுநல் லமைச்சனுமே 61 (289) (290) (291) (292)