இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
64 பல்கீஸ் நாச்சியார் காவியம் அறிந்தா லென்ன வாகுமோ" எனநினைத் தஞ்சி நடுங்கினனே! குறியெலாம் பெண்கள் மேலுள சுறாயிக் கூட்டா ளியர்விரைவில் அறிந்தார் நிலவும் நாணிடும் அழகுறும் அதிசய இளநங்கை புறநகர்ப் பகுதியில் மாளிகை அமைத்ததில் போந்துறை கின்றாளென செவியுறச் சுறாயிக் கின்பால் தோழர் செப்பினர் சென்றஃதை உவமை யில்லா அழகி யொருத்தி ஊரின் புறத்தினிலே நவமிகு மாளிகை அமைத்ததில் குடிவந் திருப்ப தறிந்ததுமே (301) புவியே யதிர்ந்திடக் குதித்தான் எழுந்தான் கொணர்கஎன் குதிரைஎன்றான். (302) ஆடுத்த பாகத்தில் காவியம் தொடரும்