{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் ஜின்களின் வேந்தன் செப்பினான் முடிவைச் சிறிதுநாள் மாற்றிவைத்தால் ஜின்களை அனுப்பி ஆங்கோர் மாளிகை சிறப்பாய் அமைத்திடுவேன் அன்னஅம் மாளிகை தன்னைக் காண்போர் 8 3 அதிசயித் தேநிற்பார் உன்னரும் சேடியர் தோழியர் போர்வலி வீரக் காவலர்கள் (297) யாவரும் நீ செலும் முன்னம் சென்றிடச் செய்வே னதன்பின்னர் யாவும் செம்மை யாக அமைந்திடும் அனுப்புவே னுனை அங்கே மூவா மருந்தினும் மேலாய்ப் பிறந்துள மகளின் திருமகளே நோவா மனத்துடன் ஏற்பாய் என்றனின் விருப்பினை எனப்பகர்ந்தான் பாட்டன் விருப்பை ஏற்றனள் பல்கீ செனுமுயர்ப் பெண்கொடிதான்! ஈட்டம தாக ஜின்களை சுறாயிக் கிருந்திடும் நாடுசெல் ஓட்டினன் பல்கீ சேகியங் கிருப்பதற் கேற்றமா ளிகையமைக்க! காட்டையும் தன்னரும் நாட்டையும் கடந்தே கடுகியே கினஜின்கள்! எழுந்தது மாளிகை சபாநக ரின்புற இடத்தில் அழகுறவே நலந்திகழ் மாளிகை அமைந்த தறிந்த நயத்தகு பல்கீசு பலங்கெழு பாதுகாப் புடன்சென் றடைந்தாள் பணிப்பெண் கள்தொடர் கலங்கிய மனத்துடன் யூசரு கானவன் கணமும் சுறாயிக்கிதை (298) (299) (300)