{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
நுகரு முன்... இது ஒரு முற்றுறாக் காவியம். இக்காவியத்தை முழுமையாக்கிடின் மூன்றங்கங்களைத் கொண்டு திகழும். இதில் உளது முதலங்கம். இதற்கடுத்ததாக அமைவது சுறாயிக் மன்னனை மணந்து, அவன் தன்னைத் தொடா முன்னரே அவனைக் கொன்று அவனுடைய நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, சீருற்ற ஆட்சியாக மக்கள் பாராட்டினைப் பெற்று ஆண்டுத் திகழ்ந்திருந்த அங்கமாகும். அதன்பின்னர் சுலையுமான் நபியை (இவரை விவிலியம் சாலமன் எனக் குறிக்கும்) மணந்து பதின்மூன்றாண்டுகள் அவர்களின் நன்மனைவியாக வாழ்ந்து, ஓர் ஆண்மகவையீன்று மரணித்த அங்கம் கண்டு முடிவுற்றிடும். இந்த முப்பெரும் அங்கங்களையும் கவிதைகளாக்கிடும் எண்ணத்தில் "பிறை" எனும் திங்கள் ஏட்டில் 1977 ஜனவரி யில் ஆரம்பித்தேன். முற்றுற்றிடா நிலையில் எனது தொடர் நின்றது. பின்னர் 'பிறை' வெளிவருவதும் நின்று பட்டது. ஒரு ஏட்டில் தொடராக வெளிவந்ததை மற்றோர் ஏட்டில் தொடர்ந்தால் புதுவாசகருக்கு முற்பகுதி தெரியாததால் படித் திடத்தோன்றாது. எனவே வேறு ஏடுகளை அணுகிடவில்லை. சீறாப்புராணத்திற்கு உரை எழுதிடும் கடினமான பணியில் ஈடுபட்டிடவேண்டிய திருந்ததால், தனியாக இதன் பிற் பகுதியை எழுதிட முடியவில்லை. பலர் நேரிலும் கடிதங்கள் மூலமாகவும் இக்காப்பியத்தை முழுவதுமாக எழுதி முடித்திடு மாறு வற்புறுத்தினார்கள். அவர்களின் அளவு கடந்த கவிதைச் சுவைப்பார்வத்தை என்னால் உணர முடிந்தது. ஆயினும் நிறைவேற்றிட இயலவில்லை. தம்பி ஆலிஜனாப் எம்.சையது முகம்மது "ஹஸன் அவர்கள், 'வெளிவந்துள்ள வரையிலான கவிதைகளையேனும் நூலாக்கிடலாமே!" என உரைத்தார்கள். அவர்களின் விருப்பு எனக்கும் விருப்பாயிருந்ததால் இந்தக் குறைக்காப்பியம் உங்கள் கையில் திகழ்கின்றது. இறையருளால் நான் உடல் நலம் பெற்றால் சீறா உரை எழுதும் பணி நிறை வுற்றதும் இக்காவியத்தை முற்றுமாக எழுதி முழுமையாக்கி வெளியிட்டிட எண்ணம். முடிவில் கிட்டிடும் பயன், தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதிச் செயற்பட்டால், அதற்கு ஆண்ட வன் தந்திடும் கூலி, மிக உயர்ந்ததாக இருந்திடும். ஆம் பல்கீஸ் நாச்சியாரின் சிந்தித்திடவும் இயலா வீரச் செய்லுக்கு, பெண் களின் கற்பைக் கவர்ந்து களங்கப் படுத்திய சுறாயிக் மன்னனைக் கொன்றொழித்ததற்கு இறைவன் அளித்த பரிசு