உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்சுவை விருந்து.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 89

பொறுப்பின்மை, அறியாமை என்ற பல துறைகளிலும் புதுக் கவிஞர்கள் தம் பார்வையைப் பதிக்கின்றனர். தம் கவிதைகளை பும் வார்க்கின்றனர். தம் சொற்களில் இந்நிகழ்ச்சிகள் விளை விக்கும் உணர்ச்சிகட்கும் உருவம் தருகின்றனர். சில தலைப்பு களில் வெளி வந்துள்ள சில கவிதைகளை ஈண்டு ஆராய்வோம்.

சுதந்திரம்: சுதந்திரத்தையே தேவியாக உருவகித்து மகிழ்ந்தவர் பாரதியார் அதனைப் போற்றிப் பரவினவர். இன்று நாடு விடுதலை பெற்று 55 ஆண்டுகள் ஆகின்றன. நாட்டிற்குப் பெயரளவில் 'விடிவு ஏற்பட்டாலும் மக்களுக்கு 'விடிவு ஏற்பட வில்லையே என்ற ஏக்கம் இருப்பதை எல்லோரும் உணர் கின்றனர். இந்த நிலை புதுக்கவிதைக்கு உள்ளடக்கமாகின்றது. இந்தக் கவிதைகளைப் படைப்பவர்கள் மக்களை நசுக்கும் மக்களுக்குச் சுதந்திரத்தை மறுக்கும் ஆளும் வர்க்கத்தையும் அதன் அமைப்புகளையும் அவர்களின் போலித்தனமான சுதந்திரச் சோஷலிசத் தத்துவங்களையும் தாக்கிப் பேசுகின்றனர். இவர்தம் கவிதைகள் சமுதாயத்தையே திறனாயும் போக்கில் ஆதிக்கக் சக்திக்கு எதிராக ஒலிக்கின்றன. சில சமயம் இக்கவிஞர்கள் கேலியும், கிண்டலுமாக, எள்ளலும் ஏசலுமாக, அமைப்புக் களையும் அவற்றின் போக்குகளையும் பழித்துப்பாடுகின்றனர்.

பூமியைச் சுமக்கும் வானங்கள் என்ற தலைப்பில் வெளி யானது. கவிதையில் சமூக யாத்திரிகனாகிய கவிஞன் ஒரு பழத்தோட்டத்தில் ஒரு பழுத்த தேச பக்தனைப் பார்க்கின்றான். அவனை நோக்கி சுதந்திரம் பற்றி என்ன சொல்கிறாய்?" என்று வினவுகின்றான். தேச பக்தனின் மறு மொழியில் சில பகுதிகள்:

'கால் விலங்கு

திறக்கக் கையெலும்பால் சாவி செய்தோம்...

1. 'கல்கி' இதழ் 63.83 (முத்து ராமலிங்கம் எழுதியது).