பக்கம்:பல்சுவை விருந்து.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO2 பல்சுவை விருந்து

கப்பம் கட்டக் காத்து நிற்பர்! இந்நாள் கல்லூரி வாயிலின் முன்னே கார்கள் நிற்கும்; கவலையைப் பெற்றோர் கட்டணம் கொட்டக் காத்துக் கிடப்பர். கட்டட நிதிகள், கற்பனை நிதிகள், ஆட்ட நிதிகள், ஆசை நிதிகள், படிப்பு நிதிகள், நடிப்பு நிதிகள் சிரிப்பு நிதிகள், செல்வ நிதிகள் என்று பல்வகை நிதிகள் தவிர கல்வி அங்கே இலவசம்."

கிண்டல் நிறைந்த கவிதை இது. இன்றைய நிலையைத் துல்லியமாகச் சித்திரிக்கின்றது கவிதை, கவிதை புதுக் கவிதையாக இல்லாவிடினும் கவிதையின் பாணி புதுக் கவிதையின் பாணியே தேர்விலும் பண பலத்தால் வெற்றி பெற்று, அதே பண பலத்தால் உத்தியோகத்தையும் பெற்று விடுகின்றனர் - அரசு அலுவலகங்களில் இவர்களிடம் நேர்மை, நானயம் எப்படி யிருக்க முடியும்? எல்லாம் செல்லாக் காசுதான்!

இன்னொரு கவிதை' படுத்துகின்றது.

பி.யு.சி.யா? ஒரு நூறு போதும்.

பி.எஸ்சி பி.எட். இருநூறு ஆகும்.

அறையில் நடப்பதை அம்பலப்

எம்.எஸ்.சி. ஆயிரம் எம்.பி.பி.எஸ்

9. கடற்கரைக் கவிதை . (61-62) 10. ஊசிகள் - பக். 65.