பக்கம்:பல்சுவை விருந்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு, அறிவியல் வரலாறு, நாட்டு வரலாறு போன்ற தலைப்புகளில் சீரிய கருத்துகளைக் கூறியுள்ளதோடு, பல்வேறு தலைவர்கள், அரசியல் அறிஞர்கள் - காந்தி, நேரு, டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர், இராஜாஜி போன்றவர்கள் எழுதிய தன் - வரலாறு, நாட்டிற்கே வழிகாட்டியாக அமைந்தது என்றால் மிகையல்ல. அதே போன்ற தமிழ்நாட்டில் 'டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய நெஞ்சுக்கு நீதி' என்ற நூல் அவரது வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்ல, தமிழகத்தின் வரலாற்றையும் விளக்குகிறது என்பது என் கருத்தாகும்.

இந்நூலாசிரியர் பேராசிரியர் முனைவர் ந. சுப்புரெட்டியார் அவர்களும் தன் வரலாறு நினைவுக் குமிழிகள் (ஐந்து தொகுதிகள்) எழுதியுள்ளார். வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப் பிட்டுள்ளார். நடந்ததை நடந்தபடியே எழுதுவதுதான் வரலாறு. ஆனால் ஒருசிலர் தங்களுக்குப் பாதகமான செய்திகளை விட்டுவிட்டு, சாதகமான செய்திகளை மட்டும் எழுதுவதை நான் கண்டிக்கிறேன். தமிழ் மொழி வரலாறு எழுதிய சூரியநாராயண சாஸ்திரியும், மொழி வரலாறு எழுதிய டாக்டர் மு.வ. அவர் களும் இங்கே நினைவு கூரத் தக்கவர்கள். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருபவர்கள், தங்களுக்கு முன்பிருந்த ஆட்சியாளர் களின் வரலாற்றை மறைத்து எழுதுவதையும் நாம் காண்கிறோம். இவ்வழக்கம் ஒழிக்கப்பட வேண்டும். ஜவகர்லால் நேரு எழுதிய "Discovery of India" என்ற வரலாற்று நூல் இத்தகையவர் களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பது கண்கூடு.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் இன்றைக்கு உள்ள சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. இந்நூலாசிரியர் வாழ்க்கைக்கு இன்றியமையா ததான அறிவியல், வேளாண்மை, மருத்துவம், நிலையாமை, அரசியல் போன்ற தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கைக்கு அவை எவ்வாறு பயன்படுகின்றன என்பதை விளக்கிக் கூறி