பக்கம்:பல்சுவை விருந்து.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

7. ஒவ்வாமை நிலை"

நம் உடலில் பல்வேறு பொறி நுட்பங்கள் உள்ளன. குருதி யோட்ட மண்டலம், மூச்சு மண்டலம், செரிமான மண்டலம், நரம்பு மண்டலம், சுரப்பி மண்டலம், இனப்பெருக்க மண்டலம் போன்ற பல்வேறு இயக்க மண்டலங்களையும், காணல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், உற்று அறிதல் முதலிய புலன் உணர்ச்சியில் பங்கு பெரும் பொறிகளையும், இவற்றிற் கெல்லாம் நடு நாயகமாவுள்ள மூளையையும் எண்ணிப் பார்த்தால் மெய்ப் பொருள் இயலார்,

காயமே இது பொய்யடா - இது

காற்றடைத்த பையடா

என்று கூறும் இப்பொய்யுடலின் வியத்தகு பொறி நுட்ப செயற் பாடுகளை அறிந்து மகிழ்கின்றோம். இறைவனது படைப்பு விந்தையும் நம்மை வியக்க வைக்கின்றது. இந்த மிகச் சிக்கலான அமைப்புகளில் எத்தனை விதமான கேடுகள் ஏற்படக் கூடும் என்பதையும், பிறப்பிலேயே இவற்றில் ஏதாவது ஒன்று சரியாகச் செயற்படாதிருந்தால் என்ன நேரிடும் என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் எண்ணற்ற செயல் சார்ந்த குறைபாடுகள் (Functional defects) யாவை என்பதை ஓரளவு உணரலாம். இந்தக் குறை பாடுகளை அறியும் நாம் நமது நிலையை எண்ணிக் களிப்படை கின்றோம். ஆண்டவன் ஏதோ ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய வற்றை நமக்கு அருளாத அவனது பேரருளை நினைத்துப் போற்றுகின்றோம். சற்றுக் குறைபாடுள்ள சிற்றுந்து - மகிழ்வுந்து - என்பதைச் சரி செய்துகொண்டே பயணத்தை மேற்கொண்டு செல்ல வேண்டிய இடத்தை அடைவதைப் போல, குறைபாடுகள் உள்ள இந்த உடலைக் கொண்டே செய்ய வேண்டுவனவற்றைச் செய்து கொண்டு முக்தி உலகத்தை அடைய முயல்கின்றோம்.

  • 20.1.91இல் சென்னை அண்ணா நகர் தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்திய உரை.