பக்கம்:பல்சுவை விருந்து.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் + 19.

பிரசங்கத் தலைப்பு

குருவி ஜோதியக் காரணுக்கு வயிற்றுப் பிழைப்பு கலா சிருஷ்டியோடு எழுதுகிறவனுக்கு

நிலாச் சோறு கல்லூரி மாணவனுக்கு - வெறும் பரீட்சைக் கேள்வி:

ஆதிசிவனையே ஆண்டியாகப் பேசும் நமது நாட்டில் வறுமையின் தத்துவம் ஏன் நிலைக்காது?

இன்னொரு இளம் பெண் கவிஞர் வறுமைக் காட்சியை அழகாகக் காட்டுகின்றார்.

நாங்கள் சமரசவாதிகள்

வெள்ளிக் கிழமை

பள்ளி வாசலுக்கும்

சனிக் கிழமை

பெருமாள் கோயிலுக்கும்

ஞாயிற்றுக் கிழமை

சர்ச்சுக்கும்

போகிறோம்!

ஏனென்றால்

நாங்கள் பிச்சைக்காரர்கள்'

இன்று இதழ்களில் வெளிவரும் புதுக் கவிதைகளும் நூல் வடிவத்தில் வெளிவருபவைகளும் பெரும்பாலும் சமுதா யத்தைப் பற்றியவையே. சமுதாயத்தின் ஓர் உறுப்பினராக இருந்து வரும் நமக்குச் சமுதாய அவலங்கள் நன்கு தெரியு மாதலால் அவை பற்றிவரும் கவிதைகள் உடனே நமது உள்ளத்தைத் தொட்டு விடுகின்றன.

17. புதுக்கவிதை வெள்ளம் (வே. சாந்தா) - ஆனந்த விகடன் இதழ் 13.3.83