பக்கம்:பல்சுவை விருந்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIII

பதவியை ஏற்றவர். விடுதலை அடைந்த இந்தியாவின் முதல் கவர்னர் - ஜெனரலாகப் பதவியேற்றார். தமது கொள்கைக்கு நேரெதிர் கொள்கைகளைக் கொண்ட, பெரியார், அண்ணா இவர்களின் நெருங்கிய நண்பர். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். இராஜாஜி அவர்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது, கண்களில் நீர் மல்க தந்தை பெரியார் அவர்கள் படுக்கை அருகில் அமர்ந்திருந்த காட்சி உள்ளத்தை உருக்கு வதாய் இருந்தது. அண்ணா அவர்கள் ஆட்சி பொறுப்பேற் பதற்கு முன் தந்தை பெரியார் மூதறிஞர் இராஜாஜி போன்ற வர்களிடம் ஆசி பெற்றதை மறக்க முடியுமா? இவர் முதல்வராக இருந்தபோது அரசியல் வாதிகள் தலையீட்டை வெகுவாகக் குறைத்து, தலைமைச் செயலக வராண்டாவைச் சுத்தமாக வைத்திருக்க ஆணை பிறப்பித்தது இவரது நேர்மைக்குச் சான் றாகும். இவரைப்போன்று தொலைநோக்குப் பார்வையோடு அனைவரும் செயல்பட்டால் தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்லும் என்பதில் ஐயமில்லை.

'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் வாக்கும், 'சாதி இரண்டொழிய வேறில்லை என்ற முதுமொழியும் இன்று கடைபிடிக்கப்பட வில்லை என்பது கண்கூடு. ஆசிரியரும் தமது ஆவேசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சாதியை ஒழிப்போம் என்று ஒருபுறம் கூறும் அரசு, மறுபக்கம் சாதியின் பெயரால் பள்ளி, கல்லூரிகளில் சேர்த்தல், வேலைவாய்ப்பு அளித்தல், பதவி உயர்வு அளித்தல் போன்ற காரியங்களில் ஈடு படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிரியர் குறிப்பிட்டதைப் போல, தெருக்களில் சாதிப் பெயரை நீக்குவதில் ஏற்படும் குளறுபடிகள், பத்திரப்பதிவில் சாதிப்பெயர் வைப்பது வேடிக்கை. இதைவிடக் கொடுமை, தம்பெயரோடு ரெட்டியார் என்று சேர்ந்திருப்பதால், அவர் அறக்கட்டளை துவங்க அனுப்பிய ரூ. 25,000/-ஐ ஒரு பல்கலைக்கழகம் திருப்பியனுப்பியது என்பதை எண்ணும் போது எந்தளவுக்கு சாதி வெறியர்கள் இருக்கிறார்கள் என்பதை வேதனையோடு குறிப்பிடுகிறார். அனைத்து அரசியல்