பக்கம்:பல்சுவை விருந்து.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

8. வரலாறு எழுதுவது எப்படி?*

ஒரு காலத்தில் வரலாறு என்றால் நாட்டு வரலாறு தான் என்ற கருத்து இருந்து வந்தது மக்களின் நினைவோட்டத்தில், இந்தக் கருத்து தவறு என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. வரலாறு என்பதில்,

தன் - வரலாறு

1.

வாழ்க்கை வரலாறு

மொழி வரலாறு

இலக்கிய வரலாறு

அறிவியல் வரலாறு

நாட்டு வரலாறு என்பனவும் பிற துறைகளின் வரலாறுகளும் அடங்கும்

என்பது இக்காலக் கருத்து. ஆகவே வரலாறு என்பதில் இத்தனை

யும் அடங்கும். இன்னும் பலவும் சேரும். இவையனைத்தும்

அடங்கிய தொகுதியே வரலாறு ஆகும். எனவே இவை

னைத்தும் எழுதுவது எப்படி என்பது பற்றிச் சிந்திப்போம்.

1. தன் வரலாறு

இது ஒருவர் தம் வரலாற்றையே எழுதுவதாகும். நேருவின் தன் - வரலாறு (Auto-biography) ஒரு புகழ்பெற்ற நூல். காந்தி ušić. Goiás ou GăT560&T' (My Experiment with Truth) யும் தன் வரலாற்று நூலே, டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் 'என் சரித்திரம்' என்ற நூலும் புகழ் பெற்ற ஒரு தன் - வரலாற்று நூல் என்பதை நாம் அறிவோம். மேனாடுகளில் தன் - வரலாற்று நூல்கள் பெருகி வருவதுபோல் நம் நாட்டில் பெருகவில்லை.

  • சென்னை பழகியப்ப சகோதரர்கள் பதிப்பகம் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பிற்குத் தந்தது.