பக்கம்:பல்சுவை விருந்து.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வாமை நிலை 131

உடலை நன்கு சோதிப்பதற்காகச் சென்னைக்கு வந்து பல்வேறு சோதனைக்குட்பட்டு (சுமார் 750 வரை செலவு) உடலுக்கு ஒன்றுமில்லை என்று சோதனைகளால் உறுதிப்படுத்தப் பட்டு திருப்பதி திரும்பினார். ஆனால் உடல்நிலை சீர்கேடடைந்து கொண்டுதான் இருந்தது. திருப்பதிப் பல்கலைக்கழக உடல் நல மையத்தில் (Health Centre) பணியாற்றி வந்த டாக்டர் வீரபத்திரய்யா என்பவர் டாக்டர் நயினாரை 'மலம் எப்படிப் போகிறது?" என்று வினவ, டாக்டர் நயினார் "கீல்மாதிரி பாகு போல் போகிறது' என்று பதிலிறுக்க, டாக்டர் வீரபத்திரய்யா 'கல்லீரல் புற்று' என்று உறுதிப்படுத்தினார். டாக்டர் நயினாரும் சில நாட்களில் நபிகள் நாயகம் திருவடியைச் சேர்ந்து விட்டார். அதிகச் செலவுடன் செய்யப் பெற்ற சோதனை களால் நோயை உறுதிப்படுத்த முடியவில்லை. இத்தகைய ஆராய்ச்சி மையங்கள் தரும் முடிவுகளின் அடிப்படையில்தான் சிகிச்சைகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. முடிவுகள் நம்பத் தக்கவையாக இராவிடில் நோயாளர்களின் கதி என்ன? அது மருத்துவனாக வந்த மாமணிவண்ணனுக்குத் தான் வெளிச்சம்!