பக்கம்:பல்சுவை விருந்து.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13○ பல்சுவை விருந்து

ஒவ்வாமைப் பொருளின் அளவை அதிகரித்துக் கொண்டே பேணல் அளவு (Maintenance doze) வரை சென்று நிறுத்து கின்றார். இவ்வாறு குத்திப் புகுத்தல்கள் உடல் நோய் எதிர்ப் பொருள்களை உற்பத்தி செய்யக் காரணமாகின்றன. இந்த நோய் எதிர்ப் பொருள்கள் தடுக்கும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் (Blocking antibodies) என்று வழங்கப் பெறுகின்றன. இவை ஒவ்வாமைப் பொருளுடன் ஒன்று சேர்கின்றன. இவ்வாறு ஒன்று சேரும் செயல் சில ஒவ்வாமைப் பொருள்கள் விடுபடுவதில் போய் முடிகின்றது; இவை முறையாகவுள்ள ஒவ்வாமை நோய் எதிர்ப்பொருள்களுடன் எதிர் வினை புரிகின்றன.

எந்த நோயானாலும் அதனை இன்னதென்று உறுதிப் படுத்தி, அதன் தன்மை, தீவிரம் முதலியவற்றை ஆய்ந்தறிந்து சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுதல் இன்றியமையாதது. இதனைக் கருத்தில் கொண்டே வள்ளுவர் பெருமான்,

நோய்நாடி நோயின் குணம்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (948) என்று கூறிப் போந்தார். இதனை மருத்துவர்களும் நோயாளர்களும் சிந்தையில் இருத்துதல் வேண்டும். இன்று நோயினை ஆராயும் மையங்கள் எம்மருங்கும் காணப் பெறுகின்றன. நோயினை உறுதிப்படுத்துவதற்கே ஏராளமான செலவுகள் நேரிடுகின்றன. பயன் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 1964-இல் என நினைக் கின்றேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறபுத் துறையில் பெரும் புகழுடன் திகழ்ந்து, இடையில் இந்தோனேஷியா சென்று பெரும் பதவி வகித்து ஓய்வு பெற்றவர் என் அருமை நண்பர் டாக்டர் முகம்மது உசேன் நயினார். அக்காலத்தில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர் பேராசிரியர் எஸ். கோவிந்தராஜூலு நாயுடு அவர்கள். அவர் விருப்பத்தின்படி டாக்டர் நயினார் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் அறபுப் பேராசிரியராகவும் (துறைத் தலைவ ராகவும்) பணி யாற்றினார். அவர் பசியின்மையால் துன்பப் பட்டார். உடல் நிலை சீர்கேடு அடைந்து கொண்டே வந்தது.