பக்கம்:பல்சுவை விருந்து.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு எழுதுவது எப்படி? 13S

2. வாழ்க்கை வரலாறு ஒரு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி இன்னொரு புகழ் பெற்ற எழுத்தாளர் எழுதுவது. இது ஆங்கில மேதையான டாக்டர் ஜான்சனைப் பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய அணுக்கத் தொண்டராக இருந்த பாஸ் வெல் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் உலகப்புகழ் பெற்றது. தமிழ் மொழியிலும் இத்தகைய வாழ்க்கை வரலாற்று நூல் சில எழுந்துள்ளன. அவை பெரும் பாலும் மன நிறைவு தருவனவாக இல்லை. டாக்டர் உ.சே.சாமி நாதய்யர் அவர்கள் எழுதியுள்ள திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் (இரண்டு பாகங்கள்) என்னும் நூல் நன் முறையில் அமைந்த வாழ்க்கை வரலாறு என்று கருதலாம்.

மகா வித்துவான் அவர்கள் ஒரு பெருங் கவிஞர். 'இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும், அம் என்றால் ஆயிரம் பாட்டு பாடும் காள மேகத்தைப்பற்றி நாம் அறிவோம். இங்ங்னம் அவரே தம் பெருமையை அதிமதுரகவியிடம் சொல்லிக் கொண்டது. அவர் பாடியவற்றை விடப் பன்மடங்கு - ஏன் நூறு மடங்கிற்கு மேல் - பாடி வந்த பிள்ளை யவர்கள் பல தல புராணங்களின் ஆசிரியர். வல்லூர் தேவராச பிள்ளை யின் பெயரால் வெளிவந்திருக்கும் குசேலோபாக்கியானத்தின் ஆசிரியரும் இவரே. அக் காலத்தில் புலவர்கள் தம்மை ஆதரித்த வள்ளல்களின் பெயரால் நூலியற்றுவது மரபாக இருந்து வந்தது. பிள்ளையவர்களின் சொல்வளத்தை, அவர் தம் நண்பர் இராமசாமி அய்யர் பாடியுள்ள,

'எனைவைத்தி, எனைவைத்தி யெனப்பதங்கள்

இடையிடைநின் றிரந்து வேண்ட 'இனிவைப்பாம், இனிவைப்பாம், பொறுத் திடுமின்:

பொறுத்திடுமின் என்று கூறி நினைவுற்ற ஒருகடிகைக் களவில்கவித்

தொடைதொடுத்து நிமலர் பூணப் புனைவுற்ற மீனாட்சி சுந்தரவள்

ளலைப்போல்வார் புவியில் யாரே.