பக்கம்:பல்சுவை விருந்து.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பல்சுவை விருந்து

பெறுதல் வேண்டும். இதற்கு யெஸ்பர்சன், வெண்ட்ரியே போன்ற அறிஞர்களின் நூல்கள் துணை புரியும், நுண்ணிய கருத்துக்கள் சுவைபடப் பொருத்தமாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் பெற்றால் நூல் சிறக்கும். மொழி வரலாற்றை விளக்கும் போக்கில் தமிழ் மொழியின் வரலாறு பின்னிப் பிணைந்து வருமாறு நூல் அமைதல் வேண்டும். இந்த மொழி வரலாற்றில் அடியிற் கண்ட செய்திகள் இடம் பெறுதல் வேண்டும்.

சொற்களின் அமைப்பு: தமிழ் மொழியின் சொற்கள் அடிச் சொற்களோடு மற்ற உறுப்புகள் சேர்ந்து ஒட்டி அமையும் சொற்கள் (Agglutinative) ஆகும். ஆகவே சொற்களின் அமைப்பு தெளிவாகத் தோன்றும். மிகப்பழைய இலக்கியங் களில் உள்ள சொற்களும் அவ்வாறு அமைந்தவை. அவற்றின் அடிச் சொற்களும் இக்காலத்துச் சொற்களின் அடிச் சொற்களும் ஒரே வகையானவை. (எ.டு) உணா (Food) என்பது பழைய சொல். ஊண், உண்டி என்பன இடைக்காலச் சொற்கள். உணவு என்பது இக்காலச் சொல். இவற்றின் அடிச்சொல் உண் என்பது. இது, இந்த மூன்றிலும் தெளிவாகத் தெரிகின்றது. விகுதி முதலியன மட்டிலுமே வேறுபடும். ஆகவே சில முறைபடித்த பிறகு, பழங்காலத்துச் செய்யுளும் பழகிய தமிழாகவே உணரப் படுகின்றது. அதனால்தான் இக்காலத்து மக்களும் ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழைய செய்யுட்களையும் படித்து உணர முடிகின்றது. அதனாலேயே இலக்கிய வளர்ச்சியில் இடையறாத தொடர்பு இருந்து வருகின்றது.

வாக்கிய அமைப்பு: தமிழின் வாக்கிய அமைப்பும் (Syntax) மிகப் பழங்காலம் முதல் இன்று வரை ஏறக்குறைய ஒரே தன்மையாக இருந்து வருகின்றது. சொற்களின் வடிவங்கள் ஒவ்வொரு திராவிட மொழியிலும் ஒவ்வொரு வகையாக மாறிய போதிலும் வாக்கிய அமைப்பு மட்டிலும் மாறாமல் ஒரே வகையாக இருந்து வருகின்றது. இந்தோ ஐரோப்பிய இனம் என்று குறிக்கப்படும் வட இந்திய மொழிகளும் இவ் வகையில்