பக்கம்:பல்சுவை விருந்து.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 45 பல்சுவை விருந்து

இங்கே கங்கை கொண்ட சோழன் வரலாற்றை ஆசிரியர் கதி யுள்ளார் என்றும் கருதுதல் வேண்டும்."

வரலாற்று ஆசிரியன் தனக்கு முன்னர் எழுதப்பெற்றுள்ள பிற வரலாற்று நூல்களையும் படித்து அவற்றிலுள்ள செய்தி களைத் தான் கூறும் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து முரண் இருப்பின் அதனை அறுத்தெறிதல் வேண்டும். இங்குக் குலோத் துங்கனும் சயங்கொண்டாரும் சமகாலத்தினர்; சயங்கொண்டார் குலோத்துங்கனின் அவைக்களப் புலவர். ஆகவே செய்திகளில் உண்மை இருக்கும் என்று நம்பலாம். முகத்துதிக்காகச் சேர்க்கப் பெற்ற சில புனைவுகளும் இருக்கலாம். வரலாற்று ஆசிரியன் இதனைத் துருவி ஆராய வேண்டும்.

விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பில் வெளி வந்திருக்கும். சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி.யின் நூல் ஓர் அருமையான படைப்பு. இந்திய விடுதலைப்போரில் மாநில மட்டத்தில் தானே நேராகப் பங்கு கொண்டவராதலால் தவறான செய்திகள் நூலில் இடம் பெறுவதற்கு இடமே இல்லை. விடுதலையும் தமிழும் டாக்டர் ம.பொ.சி யின் குருதியில் ஒடுகின்றன என்பதை எவரும் மறுத்தற்கில்லை. இதனால் இந் நூலில் குறிப்பிடப்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் யாவும் நம்பக மானவை. (Reliable) என்று சொல்லலாம். பல செய்திகளின் மறுப்பும், மறுப்புக்கு மறுப்புமாக உண்மையைக் கடைந்தெடுக்க அரும்பாடுபட்டுள்ளார் எண்பதாண்டை எட்டும் நிலையிலுள்ள இளைஞர் ஒரு பல்கலைக்கழகமோ அல்லது ஒரு வரலாற்றா சிரியர்களின் குழுவோ செய்ய வேண்டிய ஒரு பெரும் பணியை ஒரேர் உழவனாக நின்று ஆற்றியுள்ளார். ஈன்ற பொழுதில்

5. குலோத்துங்க சோழன் இளம்பருவத்தில் தன்பாட்டி வீட்டில் வளர்ந்தபோது தன் தாய் மாமன் வீரராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த கடாரப் போரில் இவனும் கலந்து கொண்டு அங்குச் சென்று போர் புரிந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றார் T.V. சதாசிவ பண்டாரத்தார் (பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி II - பக்.5 (அடிக்குறிப்பு)