பக்கம்:பல்சுவை விருந்து.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு எழுதுவது எப்படி? 145

என்ற தாழிசையால் அறியப் பெறுகின்றது. இதில் குருதி வெள்ளம்', பேய்கள் அதில் நீந்துதல், அதனால் அவற்றிற்குக் குரக்கு வாதம் வருதல் என்பதெல்லாம் சுவைக்காகக் கவிஞர் மேற்கொண்ட கற்பனை. கடாரம் அழித்தது மட்டிலும் வரலாற்றுச் செய்தி. வரலாற்று ஆசிரியன் கற்பனைகளைக் கழித்து செய்திகளை மட்டிலுமே கொள்ள வேண்டும்.

இராசேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில் எத்தனையோ போர்கள் நிகழ்த்தி வெற்றி பெற்றிருந்த போதிலும் இவன் கங்கையும் கடாரமும் கொண்டமை தான் அக்காலத்தில் மக்கள் மனத்தையும் புலவர்கள் உள்ளத்தையும் ஒருங்கே பிணித்துள்ளன. இதனால் இந்த வெற்றிச் சிறப்பினைச் சயங்கொண்டார் தம் நூலிலும், ஒட்டக் கூத்தர் தம் மூன்று உலாக்களிலும் போற்றிப் புகழ் வாராயினர். மேலும் இவ்வருஞ் செயல்கள் பற்றியே இராசேந்திரனுக்குக் கங்கை கொண்ட சோழன்', 'கடாரங் கொண்டான்' என்னும் விருதுகளும் வழங்கினவாகக் கல்வெட் டுகள் உறுதிப்படுத்துகின்றன. திருப்பதியில் கங்கை கொண்டான் மண்டபம்' என்ற ஒரு மண்டபமும் உண்டு. அதில் உற்சவ காலங்களில் பெருமாள் வந்து தங்குவார்.

கல்வெட்டுகளில் மெய்க்கீர்த்திப் பகுதி என்பது முற் பகுதி. அதில் அக்காலத்து ஆண்ட அரசன் பட்டத்திற்கு வந்த ஆண்டு முதல் அவனது வெற்றிச் சிறப்புகளும், வீரச் சிறப்புகளும் குறிப்பது வழக்கம். சில சமயம் அரசியல் செல்வாக்கினால்' பொய்யான நிகழ்ச்சிகளும் ஏறிவிடுவதுமுண்டு. மெய்க்கீர்த்தி' பொய்க் கீர்த்தியாவதுமே உண்டு. வரலாற்று ஆசிரியன் இவற்றில் வரும் செய்திகளைப் புடைத்தெடுக்க வேண்டும். கடாரத்தில் குலோத்துங்க சோழன் போர் புரிந்த செய்தி இவனது மெய்க் கீர்த்திகளில் குறிக்கப் பெறாததால், இவளது ஆட்சிக் காலத்தில் இது நிகழவில்லை என்றும், இவனது முன்னோரும்

இவனைப் போலவே பேராண்மை படைத்தவரென்பதை விளக்க