பக்கம்:பல்சுவை விருந்து.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - வாழ்வுச் செல்வம் 霊5 。

ஆனால் முன், பின் என்ற அளவிற்கு வேறுபாடு உண்டு. ஆயினும் அதன் சம்பந்தம் இன்றி அனைத்தும் இறைவனது சங்கற்பத்தால் மட்டும் நடைபெறுகின்றனவாகும். இந்த உலகில் இஃது அநித்தியமாதலால், இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற பேச்சு உண்டு. இந்தக் காலத் தத்துவம் இறைவனது படைப்பின் பரிணாமங்கட்குக் காரணமாய் இருப்பது.

வேளாண்மை. இன்று தொலைக்காட்சியில், வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் பண்ணைச் செய்தி என்ற பகுதியில் வேளாண்மை பற்றிய பல நவீன முறைகள் கூறப் பெறுகின்றன. கற்றறிந்த வேளாண்மை அறிஞர்கள் கல்வி அதிகம் பெறாத உழவர்கட்கு விதைப் பாதுகாப்பு, விதைக்கப் பெறுவதற்கு முன் விதைகளில் மருந்து கலக்க வேண்டிய முறைகள், நவீன முறையில் நிலத்தை உழுதல் போன்ற பல செய்திகள் பகரப் பெறுகின்றன. அநுபவம் மிக்க பெரிய பண்ணைக்காரர்கள் தம் அநுபவத்தை எடுத்துக் கூறுகின்றனர். வயலின் மண் பண்டுத்தல் பற்றிய செய்தியை, தொடிப்பொழுதி கஃகா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் (1037) என்ற குறளில் தெரிவிக்கின்றார். ஆனால் மாடுகளைக் கொண்டு உழும் சாதாரண கலப்பையினால் கீழ்மண்ணை மேல் மண்ணாகப் புரட்டிப் போட முடிவதில்லை. இயந்திரக் கலப்பை யினால்தான் இதனைச் செய்ய முடியும். ஈரமாக இருக்கும் அடி மண் நன்றாகக் காய்வதால் ஒரு பலம் புழுதி கால் பலமாக ஆகிற வரைக்கும் காயும். அவ்வாறு காயவிட்டால் ஒரு பிடி எருவும் இல்லாமல் பயிர் நன்றாகச் செழித்து வளரும்; விளையும். அகல உழுவதிலும் ஆழ உழுதல் நன்று' என்ற பொன்மொழியும் இதனால்தான் எழுந்தது. இன்னும் ஏர் உழுவதைவிட எரு இடுதல் நல்லது (1038) என்றும், களை யிட்ட பிறகு நீர் பாய்ச்சி விதையிட காவல் காத்தல் நல்லது என்றும் கூறுவார். பண்ணையார் அடிக்கடி நிலத்திற்குச் சென்று நிலத்தைப் பார்வையிடாவிடில் நிலம் கவனிக்கப் பெற வேண்டிய செயல்களில் குந்தகம் விளையும்.