பக்கம்:பல்சுவை விருந்து.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாஜி பற்றிய நினைவுகள் 重7量

6. இக்காலத்தில் சொந்தப் பலனையொட்டி கட்சி மாற்றங்கள் நடைபெறுகின்றன. பெரிய மனிதர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்கின்றனர். இராஜாஜி அப்பழுக்கற்ற மனிதர். காங்கிரசு கொள்கை தமக்கு ஒவ்வாமையால் காங்கிரசை விட்டு விலகி ‘சுதந்திர கட்சியைத் தோற்றுவித்தார். தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் வேண்டுகோட்கிணங்கி சில சமயம் ஆலோ சனை கூறுவார். சென்னையில் (1967) பெரிய ஊர்வலம். ஏழு மைல் நீளம். 'வால் கோடம்பாக்கத்திலிருந்தது தலை மாநாட்டுப் பந்தலை எட்டியது" (கல்கியில் - முரசொலி மாறன்).

7. இராஜாஜியின் வாழ்த்து தலைமையில் 'இப்பொழுது நமது 11 இலட்சம் பேசுவார் (11 இலட்சம் - என்பது கலைஞர். அக்காலத்தில் அண்ணா பேச்சுக்கு டிக்கெட் வைத்து 11 -இலட்சம் கட்சிக்கு சம்பாதித்தவர். டிக்கெட் ஒரு ரூபா. இறுதியாக இராஜாஜி வாழ்த்தும் போது 'காங்கிரசு தேச நன்மையை மறந்து ஒவ்வாத பிடிவாதத்தால் தவறுகள் செய்து வந்ததால் 21 ஆண்டுகளில் பதவியிலிருந்து தள்ளப்பட்டது. இது தி.மு.க.விற்கு நல்ல பாடமாக உதவட்டும்' என்று வாழ்த்தினார்.

தொடர்ந்து அவரே கல்கியில் தலையங்கமாகக் கட்டுரை எழுதினார். அதில்,

அடங்கு எழில் சம்பத்து

அடங்கக் கண்டு, ஈசன்

அடங்கு எழில் அஃதுஎன்று

அடங்குக உள்ளே (திருவாய் 1:2:7) என்ற நம்மாழ்வார் பாசுரத்தை எடுத்துக் காட்டியிருந்தார். 'உலகம் அனைத்தும் அடங்க செல்வம் முழுவதையும் பார்த்து. அஃது இறைவனுடைய செல்வமாகுமென்று நினைந்து அச் செல்வத்திற்குள் நீயும் அடங்குவாய்' என்று நினைக்க வேண்டும். அப்படி நினைந்து ஆட்சி புரிந்தால் நாம் இறைவ னுடைய பிரதிநிதி ஆவோம். அங்ங்னம் கருதாமல் நாம் வேறு.