பக்கம்:பல்சுவை விருந்து.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#72 பல்சுவை விருந்து

தேசம் வேறு என்று கருதி நம் விருப்பப்படி நாம் என்ன வேண்டு மானாலும் செய்யலாம் என்று நினைத்து ஆட்சி புரிந்தால் அது இமாலயத் தவறு. அப்படி நினைந்து ஆட்சி புரியாததால்தான் காங்கிரசு 21 ஆண்டுக்குள் அழிந்தது. தி.மு.க. இதனை ஒரு எச்சரிக்கையாகக் கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக நடந்து ஆட்சி புரிந்தால் அதன் ஆட்சி 21 நாட்கள் கூட நிலைத்திராத நிலைமை உருவாகி விடும்' என்று எழுதியிருந்தார்.

8. அமெரிக்காவில் ஜான் கென்னடி தலைவராக இருந்து ஆட்சி புரிந்த காலத்தில் நம் இந்தியக் குடியரசு அணுசக்தியை அமைதிக்காகத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை நிலை நாட்ட இப்பெருமகனை அமெரிக்காவுக்கு தூதராக அனுப்பி வைத்தது. அங்கு நடைபெற்ற ஆட்சி முறைகளை யெல்லாம் கவனித்து தம் கடமையை வெற்றியுடன் நிறை வேற்றிக் கொண்டு திரும்பினார் இராஜாஜி.

9. வந்தவுடன் அமெரிக்க ஆட்சிக்கு எச்சரிக்கை இருக்கும் பொருட்டு மேற் குறிப்பிட்ட நம்மாழ்வார் பாசுரத்தையே குறிப்பிட்டு மீண்டும் கல்கியில் தலையங்கமாக கட்டுரை வெளியிட்டு மகிழ்ந் தார். ஒரு சில மாதங்களில் காரில் விரைவாகச் சென்று கொண் டிருந்த பொழுது எதிரியால் சுட்டுக் கொல்லப்பட்டார் கென்னடி, அண்மையில் நான் அமெரிக்கா சென்றிருந்த பொழுது (மார்ச் 30 - ஜூன் 25, 2002) கென்னடி சுடப் பெற்ற இடத்தையும் தலைநகர் வாஷிங்டனில் அவருக்கு வைக்கப் பெற்றுள்ள நினைவுச் சின்னத்தையும் பார்க்கும் வாய்ப்புப் பெற்றேன்.

10. அறிஞர் அண்ணா ஆட்சியின் போது நான் திருப்பதி யில் பணியாற்றினேன். தமிழ் வளர்ச்சிக்கு மானியம் பெறுவதற் காக சென்னை வந்த பொழுது இராஜாஜி அண்ணாமலை மன்றத்தில் ஏதோ ஒரு பெரிய அரசியல் விழா நடைபெற்றது. அறிஞர் அண்ணா தலைமை, அவ்விழாவைக் காண நானும் ஒரு மூலையில் ஒரு வரிசையில் அமர்ந்திருந்தேன். மண்டபம்