பக்கம்:பல்சுவை விருந்து.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி ஒழிப்பு 187

ஊதியம் பெற்றவர். ஒய்வு பெற்ற பின் பல கோடி மதிப்புடைய சொத்துக்குரியவர். அவர்தம் பிள்ளைகட்குச் சாதி அடிப்படை யில் எல்லாச் சலுகைகளும் பெற வாய்ப்பு உண்டு. பொருளா தார அடிப்படையும் சேர்ந்தால் இவர்கள் சலுகை பெற வாய்ப்பு இருக்காது. 'சாதி' உரிமம்போல் ஆகக் கூடாது.

பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்று நகைப்பிற்கு இடமாகின்றது. நான் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இருபத்தையாயிரம் வெண் பொற்காசுகள் அனுப்பி என் பெயரில் ஒர் அறக்கட்டளை நிறுவுமாறு கேட்டுக் கொண்டேன். பல்கலைக்கழகம் அறக்கட்ட ளைக்கு இலட்சம் ரூபாய் என்று பதிலிறுத்தது. தமிழ் எம்.ஏ.யில் முதல் வகுப்பில் முதல்நிலை மாணவனாகத் தேர்ச்சிப் பெறுப வர்க்குரிய பரிசுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு எழுதி னேன். முதலில் பல்கலைக்கழகம் அதற்கு ஒப்புக் கொண்டது. சின்னாட்கள் சென்ற பிறகு 'சுப்புரெட்டியார் என்ற பெயரில் 'ரெட்டியார்' என்ற சாதிக் குறிப்பு உள்ளதால் சாதியாரிடமிருந்து தொகை பெறுவதில்லை' என்று எழுதியது. நான் தொகையைத் திருப்பி அனுப்புமாறு எழுதிப் பெற்று அதனை இலயோலா கல்லூரி (சென்னை)யில் அருட்தந்தை ஜெரோம் டி செளசா என் பெயர் சேர்ந்த பெயரில் அறக் கட்டளையை நிறுவி விட்டேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் இவ்வாறு அறக்கட்டளைக்கு இலட்சம் என்று கேட்டதால் இருபத்தையாயிரம் வெண் பொற்காவுகளை தங்கப் பதக்கத் திற்கு வைத்துக் கொள்ளுமாறு எழுதிவிட்டேன்.

இருபத்தையாயிரம் வீதம் ஏழு பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளேன். நான் செல்வச் செழிப்புள் ளவன் அல்லன். ஒய்வு ஊதியத்தில் வாழ்பவன். விருதுகள் பெறுவதில் கிடைக்கும் தொகைகளை எல்லாம் இங்ங்னம் ஒதுக்கி விடுகிறேன். இன்னும் மூன்று பல்கலைக்கழகங்களில் நிறுவ வேண்டும். நிதி வரும் வாய்ப்புகள் வரின் என் விருப்பம் நிறைவேறும். இளமை முதல் இன்றுவரை (அகவை 87) உயர்