பக்கம்:பல்சுவை விருந்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஒன்றே குலம் ஒருவனே தேவன்’

"சாதியிலே மதங்களிலே, சமயநெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகில்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே" என்று இராமலிங்க அடிகள் அவர்காலத்து மக்களை நினைந்து கழிவிரக்கம் கொள்ளுகின்றார். அவர்காலத்துச் சமுதாயத்தை விட இன்றைய சமுதாயம் மிகவும் சீர்கெட்டு சீரழிந்து கிடக் கின்றது. இத்தகு சீரழிவு மேலோங்கி நிற்பதற்கு முதல் காரணம் சாதி மத வேற்றுமை தான். இதைப் பூண்டோடு அழிப்பதில் இன்றைய நம் அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் பொது நோக்குடன் செயல் பட்டாலே இந்த சாதி என்ற சொல்லை தமிழ் அகராதியிலிருந்து நீக்கி விடலாம்.

இந்தச்சாதி என்ற சொல் எப்படித் தமிழ் மொழியில் தமிழ் இலக்கியங்களில் புகுந்தது என்பது அறியக் கூடவில்லை. பண்டைய தொல்காப்பிய இலக்கணத்தை ஊன்றிப்படிப்போர் ஆசிரியர் பிறப்பினால் சாதிப்பிரிவு செய்யவில்லை என்றும், செய்தொழில் வேற்றுமையால்தான். அப்பிரிவு அமைந்தது என்றும் அறிவர். தொல்காப்பியத்தில் அகத்திணை யொழுக லர்ற்றுக்குரிய மக்களை வகைப்படுத்திக் கூறிய நிலையிலும் புறத்தினையொழுகலாற்றில் வாகைத்திணைப் பகுதிகளை விரித் துரைத்த நிலையிலும் மக்களை ஆசிரியர் தொல்காப்பியனார் அவர்கள் வாழும் நிலத்தாலும் அவர்கள் மேற்கொண்ட தொழில் வகையாலும் பகுத்துரைத்தனரேயன்றிப் பிறப்பு வகையால் அன்று என்பது பெறப்படும்.

  • மாநாட்டு மலர் ஒன்றுக்கு எழுதியது. 1. 133. புனிதகுலம் பெறுமாறு புகலல் 1