பக்கம்:பல்சுவை விருந்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

இவ்வுலகில் வாழும் பல வகை உயிரினத்திலும் தலை சிறந்தது மனித இனம், ஏனைய இனங்களெல்லாம் தாம் வாழு மிடம் சூழ்நிலைக் கேற்றவாறு தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு உண்டு உறங்கி இனவிருத்தி செய்து வாழ் நாளைப் போக்கி வருவதையும், மனித இனம் மட்டிலும் இச் செய்கைக ளுடன், அறிவையும் விருத்தி செய்து கொண்டு வருவதையும் நாம் அறிகிறோம். ஏனைய இனங்களெல்லாம் அறிவு நிலையில் மார்க்கண்ட நிலையிலிருக்க, மனித இனம் மட்டிலும் அறிவு நிலையில் வளர்ந்து வருவதையும் காண்கிறோம். ஆடு, மாடு, குதிரை, காக்கை, கழுகு போன்ற பிராணிகள் பல நூற்றாண்டு கட்கு முன்பு இருந்தது போலவே இன்றும் அறிவு நிலையி லிருப்பதையும், மனிதன் மட்டிலும் எல்லாத் துறைகளிலும் வளர்ந்து வருவதையும் நாம் பார்க்கிறோம். இன்னொரு சிறப்பு மனிதனிடம் அமைந்திருக்கிறது. ஏனைய பிராணிகளிடம் அமையப் பெறாத நுட்பமான குரல்வளையைப் பெற்றிருக்கும் காரணத்தால் மனிதன் கருத்துகளை உணர்த்தவும் உணரவும் வல்ல மொழியை ஒரு சிறந்த கருவியாக வளர்த்துக் கொண் டிருக்கிறான். இம்மொழியை எடுத்துக் கலையாகவும் வளர்த்துத் தனது கருத்துகளை கல்லிலும் செம்பிலும் ஏட்டிலும் பொறித்து வைக்கும் பண்பாட்டையும் வளர்த்திருக்கின்றான். இக் காரணத் தால் காலத்தாலும் இடத்தாலும் செம்மையுற்றிருக்கும் மனிதன் தனது கருத்துகளையும் அநுபவங்களையும் வருங்கால சந்ததி களுக்கு உணர்த்தவும், தனது முன்னோரின் கருத்துகளையும் அநுபவங்களையும் உணரவும் முடிகிறது. இந்த அநுபவங்களும் கருத்துகளும்தான் பல்வேறு நூல்களாகவும் வடிவு கொண்டிருக் கின்றன.

இம்மாதிரியாகக் குவிந்து கிடக்கும் முன்னோரின் அறிவுச் செல்வத்தையெல்லாம் ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டி யிருக்கின்றான். மனிதனை யொழிந்த ஏனைய பிராணிகள் இவ்வாறு முன்னோர்களின் அறிவுச் செல்வத்தை அறிந்து கொள்ள முடியாது; முன்னோர் அறிவுச் செல்வத்தைத் திரட்டி