பக்கம்:பல்சுவை விருந்து.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் வள்ளுவம் i.7

"நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈறும்

வாள்.அ(து) உணர்வாற் பெறின்” (334)

என்ற குறள் மக்களின் வாழ்க்கை நிலையாமையைக் குறிக்கிறது. நீர்மேற் குமிழி போன்ற வாழ்க்கையின் சிறுமையை வள்ளுவர் உணர்த்தியிருக்கும் பெற்றியைச் சிந்திக்குந்தோறும் இன்பம் பயக்கிறது.

மனித வாழ்க்கையின் அளவைக் கணக்கிடுவதற்குக் கருவியாக இருப்பது காலம் என்னும் அருவப் பொருளாகும். காலத்தை அளக்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் ஒரு சிலரே. ஆனால் பெரும்பாலோர் அளந்து விட்டதாக இறுமாந்திருக் கிறார்கள். உருவப் பொருளை அளப்பது எளிது. உருவப் பொருளை நீட்டல் அளவை, முகத்தல் அளவை, நிறுத்தல் அளவை, எண்ணல் அளவை ஆகிய அளவைகளால் அளக்க முடியும். உலகத்தில் மக்கள் துணியை முழக்கோலாலும் நெல்லைப் படி அல்லது மரக்காலாலும், சருக்கரையைத் தராசாலும் பணத்தை எண்ணிப்பார்த்தும் அளப்பதை யாவரும் அறிவார்கள். இங்கு எந்தப் பொருள் அளக்கப்பட வேண்டுமோ அந்தப் பொருள் நேராக அளக்கப்படுகின்றது. காலத்தை இங்ங்னம் நேராக அளத்தல் முடியாது. அது ஞாயிறுபோன்ற கோள்களின் இயக்கத்தாலும், கடிகாரம் போன்ற கருவிகளாலும் கணக்கிடப்படுகிறது. ஞாயிற்றினது இயக்கத்தால் இவ்வளவு நாழிகை ஆயிற்று என்றும், கடிகாரத்தின் முட்கள் சுற்றுவதால் இவ்வளவு மணி ஆயிற்று என்றும் கூறப்படுகிறதேயன்றி காலம் என்னும் அருவப் பொருள் துணி, நெல், சருக்கரை, பணம் என்ற உருவப் பொருள்கள் அளக்கப்படுவனபோல் நேராக அளக்கப் படுவதில்லை என்பது ஈண்டு அறிதற்பாலது. இதைத்தான் பரிமேலழகர் காலமென்றும் அருவப் பொருள் உலகியல் நடத்தற்பொருட்டு ஆதித்தான் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது தானாகக் கூறுபடாமையின் நாளென ஒன்று போல்' என்று தெரிவிக்கிறார்.