பக்கம்:பல்சுவை விருந்து.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1é பல்சுவை விருந்து

ஒவ்வொரு குறள் மணியும் ஒதற் கெளிதாகவும் உணர்தற் கரிதாகவும் வேதப் பொருளைவிட மிக விழுமியதாகவும் இருக்கிறது. அதைச் சிந்திக்கச் சிந்திக்க உள்ளத்தை எல்லாம் உருக்கிக் கொள்ளைகொள்ளும் தன்மையுடையதாக இருக்கிறது. 1837g, tÑč l_Ir«9u I (PepperMint) வாயில் போட்டுக் கொண்டு உமிழ்நீர் சுரக்கச் சுரக்க இனிமை தருதல் போல, ஒரு குறள் மணியைச் சிந்திக்கச் சிந்திக்கக் கருத்தின்பம் உண்டாவதை அறியலாம். இவ்வாறு சிந்தித்தால் நூலைக் கற்போரது அறிவும் வளரும். இக் கருத்தை உருத்திரசன்ம கண்ண்ர் என்ற புலவர், மணற்கிளைக்க நீரூறும்; மைந்தர்கள் வாய்வைத்(து) உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் - பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு' என்று கூறியிருக்கின்றார். தொட்டனைத்துறும் மணற் கேணியைப் போலவும், மதலைகள் வாய் வைத்து உண்ணுந்தோறும் தாய் முலை தீம்பால் சுரப்பது போலவும், திருக்குறளை ஆராயுந் தோறும் ஆராய்வோரின் அறிவு வளர்ச்சி அடையும். மற்றும், குறள் மணிகளை சாக்கரின் மாத்திரைகளுக்கு (Saccarine pills) ஒப்பிடலாம். சாக்கரின் என்றபொருள் உலகத்திலேயே மிகவும் இனிப்பான பொருள். சர்க்கரையை விட 400 மடங்கு இனிப்பு அதிகமுடையது என்று வேதியியற் புலவர்கள் கணக்கிட் டிருக்கிறார்கள். அந்த மாத்திரையை வாயில் போட்டால் கசக்கும். ஏன்? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! அதிக இனிப்பு கசப்புச் சுவையைத் தருகிறது. அதையே அதிகமான நீரில் கரைத்து நெகிழ்த்துப் பருகினால், இனிமையாக இருப்பதை அறியலாம். அதுபோலவே சில குறள்களின் பொருள்கள் மேலாகப் பார்ப்பவர்க்குத் தெளிவாக விளங் காது.சிந்தித்துப் பார்த்தால் அவை கொண்டிருக்கும் பொருள் வளம் புலனாகும். சான்று ஒன்று தருகிறேன்.

4. திருவள்ளுவ 57೧೧) - 31