பக்கம்:பல்சுவை விருந்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பல்சுவை விருந்து

'இராஜநடை"போடும் அதன் அழகு காட்டும்போக்கு ஆகிய பல்வேறு இயக்கப் புலப் படிமங்களில் நம்-மனம் ஈடுபட்டு மகிழ்கின்றது. இங்ங்னமே புறாவின் தாயன்பு - தந்தையன்பு காட்டும் பகுதியில்,

தாய்இரை தின்ற பின்பு

தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு வாயினைத் திறக்கும்; குஞ்சு

தன்வாய்க்குள் வைக்கும் மூக்கை; தாய்அருந் தியதைக் கக்கித்

தன்குஞ்சின் குடல்நி ரப்பும்; ஒய்ந்ததும் தந்தை ஊட்டும்!

அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்." என்ற பாடற் பகுதியிலும் பல இயக்கப்புலப் படிமங்களில் ஆழங்கால் படுகின்றோம்.

கட்டுக்குள் அடங்கா தாடிக் களித்திடும் தனது செல்வச் சிட்டுக்கள்’ என்ற பாடற் பகுதியில் குறுகுறு'வென்று கொஞ்சுநடை பயிலும் சிறார்களின் நடை காட்டப் பெறுகின்றது. சிட்டுக்கள்' என்ற சொற் படத்தில் சிறார்களையும் காண்கின்றோம்; கோழி, புறா - இவற்றின் பார்ப்புகளையும் பார்க்கின்றோம்.

நுணுக்கம் அறியாப் பண்டாரம் பூங்கோதையின் நிலையைக் கணக்கர் முதலியோர் சூழ இருந்த பொன்முடியிடம் அவள் ஒரு வெள்ளை நூல் போல் ஆய்விட்டாள்', 'கவலைதான் அவள் நோய்' என்றெல்லாம் உணர்த்தத் தொடங்கியபோது,

"குறிப்பறி யாமல் நீவிர்

குண்டானிற் கவிழ்ந்த நீர்போல் கொட்டாதீர் ள்ன்றான்"

38. டிெ - டிெ 39. குடும்ப விளக்கு ஒருநாள் நிகழ்ச்சி. 40. எதிர்பாரா முத்தம் - நுணுக்கமறியாச் சனப்பன்.