பக்கம்:பல்சுவை விருந்து.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பயணம் 65

நேரிடலாம். ஆகவே குருதியுடன் எளிதில் கலக்கக் கூடிய பரிதியம் (Helium) கலந்த உயிரியத்தை (திரவ வடிவில்) எடுத்துச் செல்கின்றனர்.

உடை வசதிகள்: விண்வெளி வீரர்கள் தனிப்பட்ட முறை யில் தயாரிக்கப் பெற்ற விண்வெளி உடையை அணிந்து கொள்ள வேண்டும். இஃது இரு உறைகளாலான இரப்பர் சேர்ந்த நைலானாலானது. இந்த உடை விண்வெளி வீரர்களின் உடல் முழுவதையும் மூடிக் கொண்டிருக்கும். இஃது உடலைச் சுற்றித் தேவையான காற்றழுத்தம் இருக்குமாறு அமைக்கப் பெற்றிருக்கும். வியர்வை, துர்நாற்றம் இவை வெளியேறு வதற்கும் வசதிகள் உள்ளன. கூண்டிற்குள் குளோரில்லா (Chlorella) என்ற ஒருவித பாசி வளர்க்கப் பெறும். இது விண்வெளி வீரர்கள் வெளிவிடும் கரியமில வாயுவை ஏற்று மாப்பொருளைத் தயாரித்து உயிரியத்தை வெளிவிடும். இது மீண்டும் மீண்டும் சுவாசிப்புதற்குப் பயன்படும். கூண்டின் வெளியில் உலவும்போது விண்வெளி வீரர்கள் இந்த உடையுடன் தான் உலாவ வேண்டும். அம்புலியில் இறங்கிய விண்வெளி வீரர்கள் இந்த உடையுடன்தான் உலாவினர்.

அம்புலிப் பயணம்: விண்வெளிக் கலத்தின் மூலம் மனிதன் அம்புலியை அடைவதற்கு முன்னர்ப் பல படிகளில் சோத னைகள் மேற்கொள்ளப் பெற்றன. முதலில் ஆளில்லாத கலங் களைக் கொண்டும் அதன்பிறகு ஆளுள்ள விண்கலங்களைக் கொண்டும் இச்சோதனைகள் செய்யப் பெற்றன. அப்போலோ - 11. பயணத்தில் மனிதன் அம்புலியில் கால் எடுத்து வைத்து விட்டான்; வெற்றியுடன் திரும்பியும் விட்டான்.

பிறகோள்கள் மீது கவனம்: வெள்ளி, செவ்வாய் போன்ற கோள்களைப்பற்றி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. விண் வெளியில் நிரந்தரமான சுழலும் நிலையத்தை அமைத்த பிறகு பல பிரச்சினைகட்குத் தீர்வு காணப்பெறும். பிறகோள்கட்குப் பயணம் இங்கிருந்தே தொடங்கும்.