பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பல்லவப் பேரரசர்



இத்தகைய பல சான்றுகளை நோக்கப் பல்லவர்பஹ்லவர் என்று உறுதியாகக் கூறலாம்” என்பது ஹீராஸ் பாதிரியார் கருத்தர்கும்.[1]

இவ்வாறு பலர் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். உண்மை எது என்பது உறுதிப்படவில்லை. ஆதலின், இக் கருத்துகளை உளங்கொண்டு, இனி அடுத்துவரும் பிரிவுகளைக் காண்போம்.


2. கி.பி. 600-க்கு முற்பட்ட பல்லவர்
(கி.பி. 300-600)

முதற்காலப் பல்லவர் (கி.பி. 300-340)

பிராக்ருத மொழிகளில் தங்கள் பட்டயங்களை வெளியிட்ட பல்லவர் முதற்காலப் பல்லவர் ஆவர். இவர்கள் பட்டயங்களைக் கொண்டு முதற்காலப் பல்லவர் பெயர்கள் கீழ்வருவன என்று கூறலாம்.

சிவஸ்கந்தவர்மன் தந்தை

|
சிவஸ்கந்தவர்மன்
|
விஜயஸ்கந்தவர்மன்
|
இளவரசன் புத்தவர்மன்
|

புத்யங்குரன்.

சிவ ஸ்கந்தவர்மன்

இவன் தன் தந்தையின் காலத்தில் இளவரசனாகக் காஞ்சியில் இருந்து, பல்லாரி ஜில்லாவில் உள்ள ‘விரிபரம்’


  1. Journal of the University of Bombay, Vol.4, part 4 (1936).