பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பல்லவப் பேரரசர்



அரசன் ஆக்கினான். இந்த விஷ்ணுவர்த்தனனை அரசன் ஆக்கினான். இந்த விஷ்ணுவர்த்தனனே கீழைச் சாளுக்கிய முதல் அரசன் ஆவன். இவன் கி.பி. 614-ல் அரசன் ஆனான். இவன் மரபினரே கீழைச் சாளுக்கியர் எனப்பட்டனர்.

கங்கர்

இவர்கள் முன் சொன்னவாறு காவிரிக்குத் தெற்கே குடகுமலை நாட்டை ஆண்டவர்கள். இவர் தலைநகரம் தழைக்காடு என்பது. இவர்களுள் சிம்மவிஷ்ணு காலத்து அரசன் துர்விநீதன் என்பவன்.

சோழர்

இக்காலத்துச் சோழன் பெரியபுராணத்துட் கூறப்படும் மங்கையர்க்கரசியார் தந்தையாவன். அவன் பாண்டிய அரசனுடன் உறவுகொண்டிருந்தான்.

பாண்டியர்

சிம்மவிஷ்ணு சோழநாட்டைக் கைப்பற்றிய அதே சமயத்தில் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் களப்பிரரை விரட்டிப் பாண்டியநாட்டைக் கைப்பற்றினான். அவனுக்குப் பின் அவன் மகனான மாறவர்மன் அவனி சூளாமணி (கி.பி. 600-625) அரசன் ஆனான். இப்பாண்டியர் தெற்கில் உரிமைபெற்று வாழ்ந்த பேரரசர் ஆவர்.

பல்லவர்-சாளுக்கியர் போர்

கீழைச்சாளுக்கிய நாட்டை ஏற்படுத்திய இரண்டாம் புலிகேசி தெற்கே இருந்த பல்லவப் பேரரசன் பலத்தை ஒடுக்க விரும்பினான்; அதனாற் பெரும்படை திரட்டிப்