பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

65



நடனக் கலை

இசையுள்ள இடத்தில் நடனக்கலை நன்கு வளர்ச்சியுறும், மஹேந்திரன் காலத்தில் நடனக்கலை சிறந்திருந்தது என்பதற்கு முன்சொன்ன நடனமாதர் ஒவியங்களிலிருந்தும் மத்தவிலாச நாடகக் கூற்றிலிருந்தும் நன்கறியலாம். மஹேந்திரன் காலத்தில் தில்லையில் நடராசர் சிறப்புற்று விளங்கினார். அவரது நடனத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் பலவாறு'நடனக்கலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். நீங்கள் பெரியவர்கள் ஆகிய பிறகு திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர். இவருடைய பதிகங்களை ஆராயின், நடனக்கலை பற்றிய உண்மைகள் பலவற்றை அறியலாம்.

நாடகக் கலை

நாடகம் என்பது தமிழிற் ‘கூத்து’ எனப்படும். அஃது அரசர்க்காடும் (வேத்தியல்) கூத்து என்றும், பொதுமக்கட்கு ஆடும் (பொதுவியல் கூத்து என்றும், இருவகைப்படும். இக்கூத்து வகைகள் தமிழ் நாட்டிற் பழையனவாகும். மஹேந்திரன் சிறந்த நாடகப்பிரியன் என்பதை அவனது நாடகநூல் உணர்த்துகிறது. இந்நூல், மஹேந்திரன் காலத்தில் பல சமயத்தாரும் தனிப்பட்ட நிலையில் வாழ்க்கை நடத்திய முறையை ஒரளவு விளங்க உரைப்பதாகும்.

கதைச் சுருக்கம்

ஒழுக்கம் கெட்ட காபாலிக சமயத்தவன்[1] ஒருவன் தன்னைப் போன்ற காபாலினி ஒருத்தியுடன் குடித்து


  1. கபாலிகம், பாசுபதம் முதலியன சைவ சமயத்தின் உட்பிரிவுகள். இவற்றைச் சமயநிலை என்னும் பிரிவிற் காண்க.