பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41
களப்பிரர் யாவர்?


சோணாட்டில் களப்பிரர்

தஞ்சைக்கடுத்த செந்தலை (சந்திரலேகா) என்னும் ஊர் முத்தரையர் காலத்தில் சிறந்த நகரமாக இருந்திருத்தல் வேண்டும். அங்குள்ள கோவில் மண்டபத் தூண்களில் இருக்கும் கல்வெட்டு களில் முத்தரையர் பரம்பரையைக் காணலாம்:

பெரும் பிடுகு முத்தரையன் I

அல்லது
குவாவன் மாறன்
|
இளங்கோவதி அரையன்
அல்லது
மாறன் பரமேசுவரன்
|
பெரும் பிடுகு முத்தரையன் II
அல்லது

சுவரன் மாறன்

இந்த மூன்றாம் அரசன், ‘ஸ்ரீமாறன், ஸ்ரீகள்வர் காவலன், ஸ்ரீசத்ரு, கேசரி, ஸ்ரீகளப்ர காவலன்’ எனப் பலவாறு வழங்கப் பட்டான்.[1] இம் மரபினர் பாண்டியரை வென்றவுடன் மாறன் என்று பெயரிட்டுக் கொண்டனர்; ‘முத்து அரையர்’ - முத்துக்கள் கிடைக்கும் பகுதிக்கு (பாண்டிய நாட்டுக்கு) அரசர் என்று தம்மை அழைத்துக் கொண்டனர். இன்றேல், சேர, சோழ, பாண்டியரை வென்றனராகலின் முத்தரையர் (மு+தரையர்) எனப் பெயர் கொண்டனர் எனினும் பொருந்தும்.[2]

பாண்டி நாட்டில் களப்பிரர்

பாண்டி நாட்டில் முத்தரையர் அரசு செலுத்திய பொழுது தான் கி.பி. 470 இல் சமண சங்கம் மதுரையிற் கூட்டப் பட்டது. ‘திகம்பர


  1. R.Gopinatha Rao’s article in “Sen Tamil’ Vol.6
  2. M.S.R.Iyengar’s “Studies in S.I. Jainism,’ pp.53–55,