பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 * பல வகை விளயாடல்கள்

நாக்கை அறுத்துவைப்போம்; நகரைவிட்டே ஒட்டி

வைப்போம்; .பல்லேப் புடுங்கிவைப்போம்; பட்டணத்தில் ஒட்டிவைப்போம்

(3)

அம்மா வர நேரம் செல்லும், துரங்கு பேபி தூங்கு; காக்காய் வந்து கண்ணக் குத்தும்; தூங்குபேபி தூங்கு; கழுகு வந்து குடலே அறுக்கும்; தூங்குபேபி தூங்கு; அப்பாவர நேரம் செல்லும், பேபி தூங்கு,

(4)

அம்மான் களத்திலே, அவள் அவலுக்கு நெல்கேட்டாள்;

பாட்டனர் களத்திலே பொரிக்குப் பயறு கேட்டாள்; அம்மான், பொன்னை வாயாலே போ என்று சொல்லாமே பொன்னின் சிலம்பாளேப் பூவாலே விட்டெரிஞ்சான்; வெள்ளிச் சிலம்பாளே வேலாலே விட்டெறிஞ்சான்; தங்கச் சிலம்பானேச் சந்தனத்தால் விட்டெறிஞ்சான்; அழுது கொண்டு போய் அவள் ஐயருடன் சொல்லி அழ, ஐயர், மானம் களம்ாக்கி மல்லிகைப்பூ நெல்லாக்கி பூமி களமாக்கிப் பிச்சிப்பூ நெல்லாக்கி காசை அவலாக்கிக் கைநிறையத் தந்தாராம் ; பணத்தை அவலாக்கிப் பைநிறையத் தந்ாராம்.

(5)

அவரை உலேயாதே; அவரையின் கீழ் நில்லாதே;

ஆளான ஆள்மன்னன் அவர்வீடும் காவல்; அவர், சேனேக்கும் காவல்; சென்றுநீர் காண்பீரே;

ஆராரோ ஆரிரரோ, ஆராரோ!“

  • தந்திர மாகத் தாலாட்டி உணர்த்துதல்.