பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. பல வகை விளேயாடல்கள்

கவலேமாடு ரெண்டும் - தங்கமே;

கடைவாய்பல் ரெண்டும் போச்சே,

குருவி இருந்த மலேமேலே, குருடன் கவி பாடையிலே, அருகில் இருந்த தோழனைப்போய் ஆத்திலே தள்ளி

விட்டேன்.

ஏண்டா கிழவா, எளச்சே குதிர் போலே?

女 -

குழுக்கு விளையாட்டு

(இந்த விளையாட்டுக்கு எட்டுப் பேர்; ஆறு பேரைச் சுற்றி நிறுத்தி விட்டு, உள்ளே ஒருத்தியும் வெளியே ஒருத் தியும் நின்று கொள்வார்கள். உள்ளே இருக்கிறவள்களும் வெளியே இருக்கிறவரும் கையைக் கோத்துக் கொண்டு பாடுவார்கள்.)

உளுந்து உளுந்து செட்டியாரே, உளுத்தம் பருப்பாரே, பாலோடே நெய்யோடே

ப்ச்சைக் கிளியோடே. கோவிந்த ராஜா, -

குமுக்கு ராஜா குமுக்கு. இவ்வாறு பாடி ஒவ்வொருத்தி தலைமேலும் கைவைத்துக் கொண்டு வருவார்கள். யார் தலைமேலே வைக்கும் போது குமுக்கு என்று முடிகிறதோ அவளே அமுக்கி உட்கார வைப்பார்கள். இப்படியே ஆறு பேரையும் உட்கார வைத்து விட்டு, வெளியே இருக்கிறவள் எண்ணெய் விற்பாள்.