பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8忍

பல வகை விளையாடல்கள்

இஞ்சி எலுமிச்சங்காய் போலே-எங்கள்

இஷ்ட முள்ள அண்ணுவுக்கு இஸ்டோரிலே வேலே.

சவாரி வரும் தம்பி

ஒட்டையா வெட்டி ஒழுங்கல் கட்டி ஒடுகிற தண்ணியிலே பாலம் கட்டிச் சட்டம் செலுத்துருராம் நம்பசாமி, சவாரி வாரத்தைப் பாருங்களே. சப்பரம் வந்து சமஞ்சு நிற்கச் சவ்வளா, காடி வடம் புடிக்க, - இத்தனை பொண்டுகளா, வித்தாரக் காளிகளா, நம்ப தம்பி சாமிக்கு ரெண்டு வெத்தலேக் காம்பாலே வீசுங்களே.

அக்காள்

കുഴക്കേ மா அரைச்சுச் சந்து சந்தாக் கோலமிட்டுச் சட்டி மூஞ்சி அக்காளே, செத்தெவந் தடியேண்டி, மொந்தையிலே மாஅரைச்சு மூலயிலே கோலமிட்டு மொந்தை மூஞ்சி அக்காளே, செத்தெவந் தடியேண்டி.

வித்தியாசம்

ஆத்துக் குள்ளே ஊத்துத் தோண்டி

ஆகர் சத்தில் ஏத்தம் போட்டு

அத்தைமகன் எறைக்கும் தண்ணி -

அத்தனையும் பச்சைத் தண்ணி;

என்பொறப்பு எறைக்கும் தண்ணி

எடுக்க எடுக்க இளநீர்த் தண்ணி.