பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைப்பாடல்கள்

(குழந்தையைப் பலவிதமாக விளையாடச் சொல்லுதல்) ஆண் ஆன

குழந்தைப்பாட்டு

(குழந்தையை உட்கார வைத்து முன்னும் பின்னும் ஆட்டும் போது பாடும் பாட்டு.)

ஆனே, ஆனே, அழகர் ஆனே, அழகிய எம்பெருமான் ஏறும் ஆனே (அழகரும் சொக்கரும் ஏறும் ஆனே) குட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை, எட்டித் தேங்காயைப் பறிக்கும் ஆனே, குட்டி ஆனேக்குக் கொம்பு முளேச்சதாம்; பட்டண மெல்லாம் பறந்தோடிப் போச்சாம்.

(பி-ம். தேப்பெருமாள் + காட்டுக் கரும்பை:முறிக்கும்

- . . . . . ஆன:

காவேரித் தண்ணியைக் கலக்கும் ஆனே, செல்லக் கரும்பைப் பறிக்கும் ஆன, தெரு வெல்லாம் சுத்தி ஒடும் ஆன.