பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல் வகை விளையீாடல்கள் 85

- இங்கு கேட்கும் குழந்தை

(சிறுகுழந்தை முதல் முதல் பேச ஆரம்பிக்கும் போது "இங்இங்’ என்ற சப்தத்தையே தொனிக்கத் தொடங்கும். அதைச் செங்கீரைப் பருவம் என்றுசொல்வார்கள்.அப்போது பெரியோர்கள் அதைப் பார்த்துச் சொல்லும் பாட்டு.)

இங்கு கேட்கிற சங்கு;

வார்த்தை கேட்கிற வண்டு;

பேச்சுக் கேட்கிற பூச்சி; ,

கார்த்திகை மாசத்து நிலாவோ?

(கண் கட்டி விளையாடுதல்) -

என் உலக்கை சந்தைக்குப் போச்சு; என் உலக்கை நெல்லுக் குத்து.

r # குழந்தைக்குப் பழம் ஆனே வந்ததாம் தோப்பிலே, அளியப் பழுத்ததாம் மாம்பழம்:

குதிரை வந்ததாம் தோப்பிலே, குலுங்கப் பழுத்ததாம் கொய்யாப்பழம்.

ஆன வந்த்தாம் தோப்பிலே, அளியப் பழுத்ததாம் நாகப்பழம்; பறிச்சுப் பறிச்சுத் தின்னுதாம்; கொட்டையைக் கீழே உமிழ்ந்ததாம்; குழந்தைக்கு நிறையப்பழம் தந்ததாம்.

(பா-ம்),நாகப்பழம்.