பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

எதிர்க்க முடியாது கீழே விழுந்தான். அவன் கையில் இருந்த கத்தி நழுவிப் போய்த் தொலைவில் விழுந்தது.

தயங்கி நின்ற கூட்டத்தினர் ஓடி வந்து திருடனைப் பிடித்துக் கொண்டனர். அவனை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் விட்டனர்.

தலைமையாசிரியையின் பணப்பை மீட்கப்பட்டது. அவரிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

தலைமை ஆசிரியை அந்த இளஞ்சிட்டுகள் இரண்டையும் நன்றியோடு நினைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றாள்.

பள்ளியில் மற்ற ஆசிரியைகளிடமும் அந்தச் சிட்டுக்கள் செய்த உதவியை எடுத்துக் கூறினாள். அன்று முதல் எல்லாரும் அந்தச் சிட்டுக்களை அன்போடு நடத்தினார்கள்.

ஒரு நாள் பள்ளிச் சிறுமி ஒருத்தி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். யாரோ சிலர் ஒரு உந்தில் வந்து இறங்கினார்கள். அந்தச் சிறுமியை வழிமறித்துத் தூக்கி உந்திற்குள் போட்டார்கள்.