பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20



மறுநாள், பள்ளியில் அந்தச்சிறுமி நடந்ததைக் கூற எல்லாப் பிள்ளைகளும் சிட்டுக்களைப் பாராட்டினர்.

சிட்டுக்களும் இது போல் எல்லாருக்கும் நல்ல உதவிகளை அவ்வப்போது செய்து வந்தன.

பள்ளியில் விளையாடுவதையும், குறும்பு செய்வதையும் விட்டுவிட்டன.

அந்த மாதத் தேர்வில் எல்லாக் குழந்தைகளும் நிறைய மதிப்பெண் வாங்கினார்கள்.

சிட்டுக் குருவிகளும் நனறாகத் தேர்வு எழுதி நிறைய மதிப்பெண் வாங்கின.

ஒவ்வொரு மாதமும் அவை மதிப்பெண் அறிக்கை கொண்டுவரும்போது மரத்தில் உள்ள எல்லாப் பறவைகளுக்கும் காட்டி அம்மாச் சிட்டு மகிழ்ச்சி கொள்ளும்.

‘என் குஞ்சுகளைப் பெரிய மருத்துவர் ஆக்கப் போகிறேன்’ என்று அது அடிக்கடி சொல்லும்.