பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


'இல்லை, இல்லை. எல்லாருக்கும் தான் சொந்தம். உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்காகத் தான் இறைவன் இந்த உலகில் எல்லாரையும் படைத்திருக்கிறான். எல்லாரும் வாழப் பிறந்தவர்களே? இதில் ஐயமேயில்லை' என்றார் மன்னா.

'மன்னர் பெருமானே, தாங்கள் தங்கள் மகள் விளையாடுவதற்காக ஒரு சோலை உருவாக்கினீர்களாம். அதில் வாழும் எங்கள் சிட்டுக் குருவிகளை விரட்டியடிக்கச் சொன்னீர்களாம். உங்கள் மகள் விளையாடும் சோலையில் எங்கள் குருவிக் குஞ்சுகள் விளையாடக் கூடாதென்று சொன்னீர்களாம். உங்கள் ஆட்கள் எங்கள் கூடுகளையெல்லாம் கலைத்து விட்டார்களாம். இதற்கு நீதி கேட்கவே நாங்கள் இங்கு கூடி வந்துள்ளோம் என்று சிட்டரசன் கூறியது.

பாராண்டபுரத்து மன்னர் ஊமையானார். சிறிது நேரம் கழித்து அவர் சிட்டரசனைப் பார்த்து,

‘நான் நீதி தவறி விட்டேன். மன்னன் என்ற ஆங்காரத்தால் மனந்தெளியாமல் இந்தக் கட்டளையைப் பிறப்பித்துவிட்டேன்.