பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


இரண்டும் சேர்ந்து கத்திக் கொண்டு பறந்தோடுவதைப் பார்த்தால் எதையோ விரட்டிப்பிடிக்கப் போவதைப்போல்இருக்கும்.

அந்த மரத்தில் இருக்கும் எல்லாப் பறவை களுக்கும் அந்த இரண்டு சிட்டுக் குஞ்சுகளும் செல்லச் சிட்டுக்கள். அவை விளையாடு வதைப் பார்த்துக் கொண்டிருந்தாலே மற்ற பறவைகளுக்குப் பொழுது போய்விடும்.

இந்தச் சிட்டுக்களின் அம்மாச் சிட்டுக்கு ஒரே ஒரு ஆசை. இந்த இரண்டு சிட்டு களையும் எங்காவது ஒரு நல்ல பள்ளிக் கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்து விட வேண்டும் என்பதுதான் அதன் ஆசை.

நான்கு எழுத்துப் படித்துவிட்டால் அவை பேசும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக் கலாம். இப்படி ஒரு ஆசையை அந்த அம்மாச் சிட்டு மனத்தினுள் வளர்த்துக் கொண்டு இருந்தது.

அம்மாவின் ஆசை தெரியாமல் அந்தச் சின்ன சிட்டுக்கள் இரண்டும் விளையாட்டிலேயே ஈடுபட்டிருந்தன,