பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జీe Hs. M4ffEMIGFiISISU " " " " " " - - • • • - - - • . . . . . . . . . . 99 உதாரணமாக தளிச்சேரிப் பெண்டுகளுக்கும், காந்தர்விகளுக்கு நாயகஞ் செய்த சாவூர்பரஞ்சோதிக்கும், கோவிந்தன் சோமநாதனுக்கும் இரண்டு பங்குகள் என்றும், கணக்கு சதுரவிடங்கனுக்கு இரண்டு பங்குகள் என்றும், கீழ்க்கணக்குகள் என்ற பணிபுரிந்தவர்களுக்கு முக்கால் பங்கெனவும் ஊதியம் விதிக்கப்பட்டது: நாடக அரங்கில் பணிபுரியம் பணியாட்களுக்கு ஆளுக்கு அரைப்பங்கும், இக்கலைஞர்களுக்குத் துணி வெளுக்கவும், நாவிதஞ் செய்யவும், அரங்கு கட்டவும், வீடுகள் பழுது பார்க்கவும், பணிபுரிந்த தச்சன், கொல்லன்,கன்னான்,வண்ணான்,நாவிதன் முதலியவர்களுக்கு அரைப் பங்கும் அளிக்கப்பட்டது." 14 நாடக அரங்கில் வெற்பணிசெய்தோர் 77 பேர். இவர்களுக்கு உணவு சமைத்துப் போடுகிறவர்களுக்கு மட்கலம் வணைவார் பதினொருவர். வண்ணார் இருவர். நாவிசர் இருவர். அம்பட்டன் ஒருவன். தச்சு வேலைக்காரர்கள் பெருந்தச்சனுக்கு ஒன்றரைப் பங்கும் தச்சனுக்கு ஒரு பங்கும் அளிக்கப்பட்டன. நாடக உடைகள் தைக்கும் பாணர் மூவருக்கு ஆளுக்கு அரைப்பங்கு அளிக்கப்பட்டது. நாடகத்திற்கும் ஆடல் பாடல்களுக்கும் உரிய அணிமணிகள் செய்கிற தட்டான் ஒருவனும், அவனுடைய சிற்றாளுக்கும் முறையே ஒரு பங்கும், அரைப்பங்கும் அளிக்கப்பட்டது. மேற்பார்வை செய்யும் பெருந்தட்டானுடைய பதவிக்குக் கண்காணிப் பெருந்தட்டாண்மை என்று பெயர். அவனுக்கு ஒன்றரைப் பங்கு." இவர்களனைவரும் நிவந்தக்காரர் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களுடைய மொத்தத் தொகை 197. 20 இவர்களனைவரும் கோயில் பணியாளர்கள். இவர்கள் தவிர 50 மெய்க்காப்பாளர்கள், அர்ச்சகர்கள், வேலைக்காரர்கள் முதலியவர்களும் இருந்திருக்கிறார்கள். ஆக மொத்தம் சுமார் 700 பேர் கோயில் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இக் கல்வெட்டில் காணப்படும் ஊதியக்கணக்கைக்கொண்டு கணக்கிட்டால் ஒராண்டுக்கு எவ்வளவு கலம் நெல் பணியாளர் ஊதியமாகக் குறைந்தபட்சம் செலவாயிற்று எனக் காணலாம். 21 இப்பணியாளர் அனைவருக்கும் எவ்வளவு பங்குகள், எவ்வளவு கலம் நெல் என்பதை விளக்கமாகக் கல்வெட்டு குறிப்பிடுவதால்,