பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ே 钞 * * 恋 * * * * * * * * * * * * பழங்கதைகளும் பழமொழிகளும் 1,53,651 கலம் நெல் வரவாகும். தோவதனமாக விடப்பட்ட நிலங்கள் உள்ள ஊர் சபை நிலங்களை முழுமையாக அளந்து, இறையிலி நிலம் கழித்து பயிரேறிய நிலத்தைச் சரியாகக் கணக்கிட்டு அவற்றிற்குக் காணிக்கடன் நிச்சயித்தார்கள். அளவுகளும், நெல், தங்கமாக செலுத்தவேண்டிய காணிக்கடனும் துல்லியமாக வரையறுக்கப்பட்டன. உதாரணமாக, நிலம் - "இறை கட்டின நிலம் முப்பத்தொன்பதரையே மூன்று மாக்காணி அரைக்காணிக் கீழ் முக்காலே நான்குமாமுக்காணிக் கீழ் முக்காலே ஒருமா." ஒரு கையகல நிலம் கூட கணக்கில் விடப்படவில்லை. பொன்-"இறை கட்டின பொன் முன்னூற்று'நாற்கழஞ்சே மூன்று மஞ்சாடியும் ஒன்பதுமா மாவரை” மஞ்சாடி கூட பின்னமாக்கி அதன் நிறை மாவரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கும் கடுகளவு பொன்கணக்கில் விடப்படவில்லை. நில அளவு : ராஜராஜன் காலத்தில் தான் ஊர் முழுதும் உள்ள நிலத்தை அளந்து, இறையிலி நிலம் கழித்து, பயிராகும் நிலத்தைக் கணக்கெடுத்துச் சரியான இறை பெற வழி வகுக்கப்பட்டது. இவ்வாறு அளந்த கோல் உலகளந்தான் கோல் ராஜராஜன் கோல் என்றழைக்கப்படும். பல்லவர் காலத்திலேயே தேவ தானமாக நிலங்கள் விடப்பட்டன." ஆனால் ஊர் முழுதும் அளந்து, இறையிலி எவ்வளவென்பது நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, சொந்த நிலமுடையவர்கள் கூட இறையிலியாகத் தங்கள் நிலத்தை அனுபவித்து வந்தார்கள். சில ஊரார் இறையிறுக்க வேண்டிய நெல்லைக் குறைத்து அளப்பதற்காகத் தமது ஊர் நிலத்தில் இறையிலி நிலத்தைக் கூட்டிக் கணக்கிட்டார்கள். எனவே ராஜராஜன் தேவதானங்களில் இருந்த கையாடல்களையும் ஊழல்களையும் தவிர்த்து, இறையிலியையும், இறைகட்ட வேண்டிய நிலத்தை நிச்சயித்து மொத்தமாக ஊரார் கட்ட வேண்டிய காணிக்கடனை நிச்சயித்து ஆணை பிறப்பித்தான். பொன் காணிக் கடன் : பொதுவாக உழவர்கள் வாழ்ந்த கிராமங்கள், பிராமணர் வாழ்ந்த தேவதானச் சதுர்வேதி மங்கலங்கள், இவற்றிற்கு நெல் மட்டுமே காணிக்கடனாக வசூலிக்கப்பட்டது. மேற்கண்ட அட்டவணையில் காணப்பட்ட தேவதானங்களில் (3) குறு