பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 . . . . . * * 处 * 命 纷 ° . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் ಇಣ பறிப்பதற்காக ஒருவனத்திற்குச்சென்று, அவ்வனத்தைக் காவல்புரிந்த அனுமானது வாலை நிமிர்த்த முடியாமல் தோற்றுபோனதாகவும் ஒரு கிளைக் கதையுள்ளது. அந்த வால் இதுதான் என்று தொடர்புப் புனைகதையொன்று உருவாக்கப்பட்டு வழங்கிவருகிறது." மாந்தோப்பில் மாங்காய் களவு செய்ய ஆட்கள் நுழையாதபடி தடுக்க இக்கல் பயன்பட்டிருக்கவேண்டும். இதுபோலப்பல சின்னங்கள் பயத்தை உண்டாக்கப் பயன்படுகிறது. நாகம், சிங்கம், பூதம், யாளி முதலியன கோவில் பொக்கிஷங்களுக்குக் காவலாக இருப்பதாகப் புனைகதைகள் உண்டு. சில சிவன் கோவில்களைப் பூதம் காப்பதாகப் யூதக்கல் உருவங்கள் கோவில் வாசலில் அல்லது பொக்கிஷ அறை வாசலில் செதுக்கப்பட்டிருக்கும். நாயோடு சேர்ந்த பைரவர் சிலைகள், சிவன் கோவிலைப் பாதுகாப்பதாக நம்பிக்கை உள்ளது. எல்லாச் சிவன் கோவில்களிலும், மழுவணிந்த சண்டேசுவர் சிலைகள் உண்டு. யாரும் கோவில் சாமான்களைத் திருடிச் செல்லவில்லை என்று காட்ட இச்சிலை முன் கைதட்டிச் செல்லவேண்டும். இதில் உள்ள நம்பிக்கை, இரவில் இச்சிலைகள் உயிர் பெற்றுக் காவல் காக்கின்றன என்பதேயாகும். இந்த நம்பிக்கையில்தான் காளி அல்லது மாரியம்மன் கோயில்களுக்கு வாசல் தேவதைகள் தோன்றியிருக்கவேண்டும். 3. அனுமன் தீர்த்தம் தர்மபுரி மாவட்டத்தில் ஊத்தங்கரை என்ற சிறு நகரின் அருகே ஒரு வற்றா ஊற்றிலிருந்து நீர் வெளிப்படுகிறது. அதை ஆற்றுப்படுகை மட்டத்திற்கு மேல் 4 அடி உயரம் தொட்டி போலக் கட்டி நீர் வடிய ஒரு தூம்பும் வைத்திருக்கிறார்கள். இத்தொட்டி பிற்காலத்தில் கட்டப்பட்டது. ஊற்று நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு அனுமன் தீர்த்தம் என்று பெயர். இதைப் பற்றி ஒரு புனைகதை உள்ளது. சீதையைத் தேடி வரும் பொழுது இராமன், இலக்குவன், அனுமான் மூவரும் ஆற்றின் அருகிலுள்ள ஒரு மலையில் தங்கினார்கள், இராமன் சந்தியாவந்தனம் செய்ய நீர் கொண்டு வர அனுமtனை அனுப்பினான். அனுமான் தண்ணீர் தேடச் சென்றவன் நெடுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இராமன் ஓர் அம்பில் ஒரு செம்பை வைத்து எய்து,