பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് 154 . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் t ಇಣ இராமேசுவரம் பற்றிய புனைகதை இவ்விரு வகைகளினின்றும் வேறுபட்டது. இது சைவ வைணவ சமய உயர்வுப் போட்டியில் தோன்றியதாகும். இராமன் சிவனை வழிபட்டதாகவும், சிவன் விஷ்ணுவை வழிபட்டதாகவும் கூறும் கதைகள் சிவன் உயர்ந்தவரா விஷ்ணு உயர்ந்தவரா என்று விவாதிப்பதற்காகவே புனையப்பட்டன. ஸ்தல புராணங்களிலும், ஐயப்பன் கதைகளிலும், விஷ்ணுமோகினிக் கதைகளிலும் இதைக் காணலாம். இந்தப் போராட்டங்களின் எதிரொலியாக விஷ்ணு வணங்கிய சிவன் கோவில்கள், சிவன் வணங்கிய விஷ்ணு கோவில்கள் பற்றிய கதைகள், தோற்றப் புனைகளாகச் சில கோவில்களோடு தொடர்புகொண்டு உருவாயின. இராமாயணக்கதை சங்க காலத்துப் புலவர்களுக்குத் தெரிந்திருந்தது. சிலப்பதிகார காலத்தில் அதன் சம்பவங்களை விரிவாகச் சொல்லாமல் உவமையாக இளங்கோவடிகள் கூற்றினால் தெரிந்துகொள்ளுமளவிற்குப் பரவியிருந்தது. ஜைனர்களுக்கும் பெளத்தர்களுக்கும், வால்மீகி இராமாயணத்தினின்றும் வேறுபட்ட இராமாயணங்கள் தெரிந்திருந்தன. ஆனால் கம்பனது இராமாயணமே மிகப் பரவலாக நாட்டு மக்களிடையே பரவிவிட்டது என்பதற்கு கம்பனைப் பற்றிய கதைகளும் கம்பனது வாழ்க்கை பற்றிய நாட்டார் கதைகளும் சான்று கூறுகின்றன. எனவே கம்பனது காலத்திற்குப்பின் இது கற்றவர்களது காப்பியமாக இல்லாமல் நாட்டாரிடமே பரவிய கதையாகிவிட்டது. இக்கதைகளின் பல நிகழ்ச்சிகள், அவர்களுடைய புனைகதைகளை (legends)ஐ ஒத்திருந்தன. இராமாயணத்தின் நாட்டுக் கூறுகள் (folk elements) தங்களுடைய நம்பிக்கைகள், வாழ்க்கை மதிப்புக்களை ஒத்திருந்தன. தங்கள் படைப்புகளை ஒத்த பாத்திரங்களையும் தங்களது வாழ்க்கை மதிப்புக்கள் போன்ற மதிப்புக்களையும் அவர்கள் இராமாயணப் பாத்திரங்களிலும், இராமாயண காவிய மாந்தர்களின் மதிப்புகளிலும் (values) கண்டார்கள். இதில் முக்கியமான சிறு பாத்திரங்கள் அனுமன், சபரி, குகன், ஜாம்பவான்.