பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்கதைகளும பழமொழிகளும் - «ء ء هاء ه م هو مه . . و ، يَةِ ಇಣ பின்னர் கூறப்படும் படைப்புக் கதைகளுக்கும் அவை தோன்றி மாறி, வளர்ந்த முறைகளுக்கும் விளக்கம் காண்பது எளிதாகும். இக்கதைகள் வரலாற்று முற்காலத்தைக் குறித்தவை. இவற்றுள் வரலாற்று மனிதர்கள் எவரும்பங்கு கொள்ளுவதாகக் கூறப்படவில்லை. தியாமத் மனிதர் படைக்கப்படுமுன் கொல்லப்பட்டுவிட்டாள். மொரோடாக்கின் கதை மனிதன் படைக்கப்படுமுன் முடிந்துவிடுகிறது. ஆனால் இக்கதையை மொரோடாக்கை வழிபட்ட மனிதர்கள்தான் கற்பனையால், தங்கள் காலத்திற்கு முன்பிருந்த கதைகளை இணைத்து மாற்றிப் படைத்தார்கள். அவர்கள் காலத்தில் எழுத்துத் தோன்றவில்லை. இது வாய்வழியாகப் பரம்பரை பரம்பரையாக வழிச் செலுத்தப்பட்டது. எழுத்து தோன்றிய பின் எழுதப்பட்டு, படைப்புக் கதையாக அஸஅர்பானிபால் என்ற பாபிலோனிய மன்னன் காலத்தில் பாதுகாக்கப்பட்டது. அவ்வாறானால் இக்கதையின் முக்கியக் கூ றுகள் வரலாற்று முற்காலத்தில் பல கட்டங்களில் தோன்றிக் காலப்போக்கிலும், சமுதாய மாற்றங்களின் போக்கிலும் மாறி வளர்ச்சியடைந்து மொரோடாக்கின் கதையாக முழுமை பெற்றிருத்தல் வேண்டும். இக்கதையின் கூறுகள் எந்நிலைமைகளில் தோன்றின என்ற வினாவிற்கு விடை காண வரலாற்று முற்காலப் பண்டைச் சமுதாயங்களின் வளர்ச்சி முறையை அறிதல் வேண்டும். டார்வினது"உயிரினங்களின் தோற்றம்” என்ற நூல் வெளியான பின்னர் பல உயிரினங்கள் அவ்வவ்வாறே படைக்கப்பட்டன என்ற கருத்து தோல்வியடைந்தது. சிற்றுயிர்கள் சூழ்நிலைக்கேற்றபடி தம்மை மாற்றிக் கொள்வதால் அவை படிப்படி மாற்றம் அடைந்து பல்லுயிர்க்கணங்கள் தோன்றின" என்ற பரிணாடிக் கருத்து விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டது. அதிலிருந்து உயிரின வளர்ச்சிக் கருத்து விஞ்ஞானத்தில் ஆதிக்கம் பெற்றது. எல்லாத் துறைகளிலும் இப்பளிணாமம் அடிப்படை உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவரை மனிதனது சமுதாயங்களைத் தனித்தனியாகக் கருதி வந்த மானிடவியலும், சமூகவியலும் இக்கருத்தின் அடிப்படையில் ஆய்வுகள் தொடங்கின. உலகப் படைப்புப் போலவே, சமூகப்