பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് நக. வின்யிாமலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 17 படைப்பையும் கருதிவந்த அறிஞர்களின் கருத்துக்களோடு, சமுதாயப் பரிணாம வளர்ச்சி என்ற கருத்து மோதியது. இது பற்றி கார்டன் சைல்டு பின்வருமாறு கூறுகிறார்: “18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய சமுதாயத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சமுதாயங்களை ஆய்வாளர்கள் கண்டனர். அவர்களை ஸாவேஜ் (Savages) என்றழைத்தனர். அவர்களுள்ளும், சமூக அமைப்பு, தொழில் நுணுக்கம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பல வேறுபாடுகள் இருப்பதைக் கண்டனர். சில ஆய்வாளர்கள் லாவேஜ்களிலும் ஏற்றத்தாழ்வான நிலைகள் இருப்பதைக் கண்டு வேறுபட்ட நிலைகளை வரையறுத்தனர். 1768-ல் பெர்குலன், ஸாவேஜரி" என்ற நிலையை பார்பரிசத்திலிருந்தும் இரண்டையும் நாகரிக நிலையினின்றும் வேறுபடுத்திக் கண்டார். இவையாவும் தொடர்பற்ற தனித் தனியான அமைப்புக்கள் என்று அவர் கருதினார். உயிரினங்கள் தனித்தனியாக படைக்கப்பட்டன என்ற பைபிள் ஆதியாகம கருத்தையொத்து சமூகங்களும் தனித்தனியாக ஒன்றில் இருந்து ஒன்று தோன்றாமல் தனித்தனியாகத் தோன்றியவை என்பதுதான் அவருடைய கருத்து. அவர் காலத்து மானிடவியல், சமூகவியல் அறிஞர்களும் அவ்வாறே கருதினர். பரிணாம வளர்ச்சிக் கொள்கை தோன்றிய பின் அறிவுலகம் சமுதாயங்களின் வேறுபாடுகளை அக்கொள்கையின் சிந்தனைகளின் அடிப்படையில் சிந்திக்கத் தொடங்கியது. இது சமூகவியலிலும், மானிடவியலிலும் ஏற்படாமல் தத்துவத்தில் தொடங்கியது. 1850-ல் ஹெர்பட் ஸ்பென்சர்" இச்சிந்தனை மாற்றத்தைத் தோற்றுவித்தார். அவர் அங்க ஜீவிகளுக்கும், சமூகங்களுக்கும் ஒரு பொருத்தப்பாட்டை (analogy) எடுத்துக்காட்டினார். அங்கஜீவிகள் சூழ்நிலையின் தொடர்பாலும் மாற்றுச் செயல்களாலும் (mutual interactions) வளர்கின்றன. அதுபோலவே சமுதாயங்களும் சூழ்நிலையோடு எதிர்செயல் புரிவதால் வளர்கின்றன என்ற புரட்சிகரமான கருத்தை வெளியிட்டார். வளர்ச்சிக்குரிய காரணங்கள் இவ்விரண்டிற்கும் வேறு வேறானவை. தற்காலத்திலுள்ள லாவேஜ், பார்பரிசம் ஆகிய வளர்ச்சி நிலைகளிலுள்ள சமுதாயங்கள் அவ்வவ் வளர்ச்சிகளில் வளர்ச்சி தடைப்பட்டு நிற்கின்றன. முழுமையாக எல்லாச் சமுதாயங்களையும் கருத்தில் கொண்டால் பரிணாமச் செயல்பாட்டை நாம் காணமுடியும்.